பூந்தமல்லி அருகே இடித்து தள்ளப்படும் கடைகள், வீடுகள்.. அதிரடியாக நடக்கும் பெரிய மாற்றம்
சென்னை: பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி அருகே கரையான்சாவடி, குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ தூணில் வாகனங்கள் செல்லும் பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கப்பட்டால் வாகனங்கள் எளிதாக சென்றுவர முடியும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளில், பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட உள்ளது. அந்த பகுதி மக்களின் வசதிக்காக, மவுண்ட்- பூந்தமல்லி சாலை பகுதியில் உள்ள கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ தூண்களின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படுகின்றன,

இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அப்பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை நோட்டீஸ் அளித்து இடித்து அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் காட்டுப்பாக்கம் பகுதியில் இருந்து கல்லறை பஸ் நிறுத்தம் வரை மெட்ரோ தூண்களின் மீது வாகனங்கள் செல்லும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வாகனங்கள் கீழே செல்வதற்காக சர்வீஸ் சாலைகள் மற்றும் கால்வாய்களும் அமைக்கப்பட இருக்கின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக மட்டும் பெருநகர சென்னை வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.150 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. மேம்பாலம் அமைப்பதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதால், விரைவில் அந்த தடத்தில் பொதுமக்களுக்கான போக்குவரத்து தொடங்க போகிறது. அங்கு வாகன நெரிசலை குறைக்க மெட்ரோவில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இது முடிந்தால் எளிதாக வாகன ஓட்டிகள் சென்றுவர முடியும்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications