பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் உண்மையிலேயே டிசம்பரில் ஓடுமா.. பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?
சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரயில் சேவை பொதுக்கள் பயன்பாட்டிற்கு டிசம்பரில் கொண்டுவரப்பட உள்ளது. ஆனால் பூந்தமல்லி-போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
சென்னையில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை கோயம்பேடு, வடபழனியாக ஒருவழித்தடமும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை ஒருவழித்தடமும் மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அதன்படி மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையாக அறிமுகம் ஆக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி பூந்தமல்லி-போரூர் இடையே முதல் சோதனை ஓட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 28-ந்தேதி 2-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3-ம் கட்ட சோதனை நேற்று, போரூர் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை 10 கிமீக்கு கடந்த ஜூன் மாதம் நடந்தது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் 2-ம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்பட உள்ளது. பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மெட்ரோ செய்தது. அப்போது, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் அக்டோபர் மாத இறுதிக்குள் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்கும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே இந்த வழித்தடத்தில் டிசம்பரில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க முடியும். ஆனால் இன்னமும் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்கப்படவில்லை. நவம்பரில் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பாப்பு அதிகமாக உள்ளது.
டிசம்பரில் பூந்தமல்லி போரூர் மெட்ரோ பயன்பாட்டிற்கு வரும் அதேநேரம், போரூரில் இருந்து ஆலப்பாக்கம் வரையிலும், ஆலப்பாக்கத்தில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலும் அடுத்தகட்டமாக சேவை தொடங்குமாம்.. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications