உறவுகள் உணர்ந்தால் சரி! ஏர்போர்ட் போகிற வழியில் கண்ட காட்சி! கவிஞராக மாறிய திமுக முன்னாள் அமைச்சர்!
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது வழியில் கண்ட ஒரு காட்சியை வைத்து பெண்களுக்கு சமூகம் வழங்கிய பட்டங்களை கவிதையாக படைத்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா.
மேலும் தன்னை மனதளவில் நெகிழ வைத்த காட்சியை படம் பிடித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ளார் பூங்கோதை. அவர் எழுதிய கவிதை வருமாறு;

"உழலும் உழைப்பாளி "
பல பரிமாணங்கள்
பேத்தியாக மகளாக
தமக்கையாக தங்கையாக
மாமன் அத்தை மகளாக
பெரியம்மா பெரியம்மா பெருமகளாக
சித்தி சித்தப்பா செல்லமாக
அனைவரின் அன்பு தோழியாக
பின்னார் வந்தான் வானவராயன்
மாசற்ற மனைவியாக மருமகளாஎ
மைத்துனி, நாத்தனார்
பிறந்தன தாய் பட்டம் வழங்கிட
சுழலுகிறது வாழ்க்கை சக்கரம்
பட்டங்கள் கூடுகிறது
மாமியாராக , பாட்டியாக
நம்பிக்கை என்ற ஒற்றை சொல்லில்
தன் ஒற்றை கையை
வாகனத்தின் கம்பியை
இறுக்கி பிடித்தவாறு
சற்று கண்ணயர்ந்து தூங்கு

சமூகம் வழங்கிய உறவு பட்டங்கள்
நிலைத்திட
தொடர் உழைப்பாளியாக
அனைவரின் கனவு மெய்படவே
இத்தகைய பயணங்கள் !
உறவுகள் உணர்ந்தால் சரி !
நித்தம் தோறும் நின்னை போன்ற
நம் வர்க்கமே! சமர்பணங்கள் பல கோடி!
சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் என் நெஞ்சை நெகிழ செய்திட்ட இந்த காட்சி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். பெண்கள் பிறந்து முதல் மரணிக்கும் வரை அவர்கள் அடையும் பரிணாமங்களை கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications