ஆணவம், அகம்பாவம் வேண்டாம்! உங்களை அழித்துவிடும்! யாரை சொல்கிறார் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்
சென்னை: "ஈகோ" எனும் எதிரி அழிவுக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுக ஒன்றிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி மறுத்து வரும் நிலையில் பூங்குன்றனின் பதிவு அவரை விமர்சித்ததாகவே கருதப்படுகிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அரசியல் தலைவராக இருந்தாலும், ஆன்மீக மடாதிபதியாக இருந்தாலும் அல்லது சாதாரண மனிதராக இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொது எதிரி இருக்கிறது. அது வெளியில் இருந்து வரும் எதிரி அல்ல..! நம்முள் மறைந்து இருக்கும் ஒரு எதிரி. அந்த எதிரியின் பெயர் ஈகோ. ஈகோ என்பது "நான் தான் சரி", "எனக்கு எல்லாம் தெரியும்", "நான் செய்யும் காரியத்தை யாரும் கேள்வி கேட்கக் கூடாது" என்ற எண்ணத்தை உருவாக்கும். இந்த எண்ணம் ஆரம்பத்தில் சக்தி போல தோன்றினாலும், காலப்போக்கில் அது நம்மை அழிவின் பாதைக்கு இழுத்துச் செல்லும். ஈகோ வந்தால் என்ன ஆகும்? ஆலோசனை கேட்க வேண்டிய இடத்தில் கூட நாம் தனியாக முடிவெடுக்கிறோம்.
நமது தவறுகளை ஒப்புக்கொள்ளாமல், அதை மறைக்க முயல்கிறோம். பிறர் நம்மைவிட சிறப்பாக செயல்படுவதை பார்த்தால் பொறாமை உருவாகிறது. மனதில் "நான் தான் பெரியவன்" என்ற உணர்வு வளர்ந்து, அன்பும் பணிவும் குறைகிறது. இது எந்தத் துறையிலும் நம்மை மெதுவாக வீழ்ச்சி பக்கம் அழைத்துச் செல்லும்..! ஈகோ வைத்திருக்கும் மனிதன் எப்போது தவறு செய்கிறான் என்று அவனே அறிய மாட்டான். ஆனால் காலம் மட்டும் அந்த தவறுகளை கணக்கில் வைத்தே இருக்கும்.
ஒரு நாள் தோல்வி வந்து கதவைத் தட்டும். அந்த வலி தான் உண்மையை உணர வைக்கும். அப்போது தான் நம்முள் ஒரு குரல் எழும், "இவ்வளவு அகங்காரத்தை வைத்திருக்காமல் முன்பே சற்று பணிவுடன் நடந்திருந்தால் இன்று நான் வெற்றி பெற்றிருப்பேன்..." இந்த உணர்ச்சியே சிலருக்கு திருத்தம் தரும். ஆனால் பலருக்கு அது திரும்ப முடியாத இழப்பாக மாறிவிடும். ஈகோவை விட்டு விட்டால் வாழ்க்கை எவ்வளவு லேசாகிப் போகிறது தெரியுமா?
யாரிடமும் கற்றுக்கொள்ளத் தயங்க மாட்டோம். குறைகள் இருந்தால் அதை ஏற்று திருத்திக் கொள்ளலாம். உண்மையான அன்பும் மதிப்பும் சுற்றியுள்ளவர்களிடமிருந்து கிடைக்கும். நாம் எப்படியும் முன்னேறிக் கொண்டே இருப்போம். தற்பெருமையை விட்டுவிட்டால் மனம் சுதந்திரமாகிறது. பணிவாக இருந்தால் வெற்றி நம்மைத் தேடித் வரும். ஈகோ என்பது பூட்டப்பட்ட கதவைப் போல..! அதின் பின்னால் நம் வளர்ச்சி, நம் வெற்றி, நம் மகிழ்ச்சி எல்லாம் இருக்கிறது. அந்த கதவைத் திறக்கும் ஒரே சாவி பணிவு. அதனால், எந்த நிலையிலிருந்தாலும் நம் உள்ளம் எப்போதும் சீராக, எளிமையாக, பணிவாக இருக்கட்டும். ஈகோவிலிருந்து தப்பித்த மனிதன் மட்டுமே உண்மையான வெற்றியாளன். E-Go வந்தவுடன் அதை நாம் E-Rase செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அது போல் செங்கோட்டையன், தவெகவில் இணைந்தது குறித்தும் அவர் கருத்துகளை பதிவிட்டிருந்தார். அதில் "ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த ஓர் உரையாடல்! இன்று என் மனதை மீண்டும் மீண்டும் எரித்து, எண்ணங்களை எண்ணற்ற திசைகளில் தள்ளுகிறது. நமது இயக்கத்தில் இன்று நிர்வாகியாக வலம் வரும் எனது நண்பருடன் அப்போது நான் பகிர்ந்த பேச்சுகள் இன்று நினைத்து பார்க்கும்போது வியப்பையும், வேதனையையும் ஒருசேர அளிக்கிறது.
அப்போது அவர் நடிகர் விஜய் பற்றி மிகத் தெளிவாக ஒரு கருத்து சொன்னார், "அவருக்கு அரசியல் தெரியாது... எதுவுமே தெரியாமல் ஒருவர் எப்படி வெற்றி பெற முடியும்?" அவரின் பேசும் பாணி, நம்பிக்கை, யாரோ தெரிந்த ஒருவரைப் பற்றி பேசுவது போல இருந்தது. நான் அமைதியாக கேட்டேன். பின்னர் சொன்னேன். "இல்லை... வெளியில் அவருக்கு செல்வாக்கு பிரம்மாண்டம். தமிழகத்தை பொறுத்தவரை கலைத்துறையின்மீது மக்களுக்கு கொள்ளை காதல்.
ஒரு நடிகர் மக்கள் மனதை எட்டிப்பார்ப்பது எளிது. குறிப்பாக சிறுவயது பிள்ளைகள் அவரைப் பிடித்த கதாநாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர் தன்னை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் அவரை தெரியாதவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சென்று சேர்ந்திருக்கிறார். அதுவே அரசியலுக்கான முதல் படி." உடனே அவர் மீண்டும், அதெல்லாம் அவருக்கு ஒத்து வராதுங்க..! நடிப்பு வேறு அரசியல் வேறு என்றார். நீங்கள் சொல்வது சரி. ஆனால் அவர் தன்னை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ளலாமே! நீங்கள் பார்த்த போது விஜய் அப்படி இருந்திருக்கலாம்.
நாளை அவர் தன்னை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா! வரும்போது எல்லோரும் அரசியல் ஞானியாகவா வருகிறார்கள். எதிலும் பின் வாங்காமல், தைரியமாக மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக மாறினால் கட்டாயம் வெற்றி பெற முடியும் என்றேன். அவரோ உடனே மறுத்து, "அவருக்கு பூத் தெரியுமா? பூத் கமிட்டி போட தெரியுமா?" என்றார். அவரின் நம்பிக்கையைக் கேட்ட நான் எதிரே பார்த்து கேட்டேன். "சரி... உங்களுக்கு பூத் தெரியுமா? தெரியும் என்றார்.
வாக்குச்சாவடி முகவர்களை எப்படி நியமிக்க வேண்டும் என்பது குறித்து தெரியுமா? நல்லா தெரியும் என்றார். உங்கள் மாவட்ட அரசியல் நிலைமை என்ன? மற்ற கட்சிகளில் யார் செல்வாக்கானவர்? நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் யார் நல்லவர் கெட்டவர் என்பது தெரியுமா? இது பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர் ஆர்வம் நிறைந்த நம்பிக்கையோடு, "எனக்கு எல்லாம் தெரியும்.
நான் பார்த்து படித்துத்தான் இங்கு வந்திருக்கிறேன்! எனது தந்தை காலத்திலிருந்து நான் அரசியல் செய்து வருகிறேன்" என்று பெருமையாகச் சொன்னார். அதைத்தான் நான் அமைதியாக ஒரு கேள்வியாக மாற்றினேன்.
"சரி, உங்களுக்கு இவை எல்லாம் தெரியும். அந்த அறிவும் அனுபவமும் கொண்ட நீங்களே விஜயின் பக்கம் சென்றால் என்ன ஆகும்? அவர் இன்னும் வலிமையானவராக மாற மாட்டாரா? உங்களைப் போன்ற விவரம் தெரிந்தவர்கள் நம் இயக்கத்தில் இருந்து அங்கு சென்றால் நிலைமை மாறாதா? சிறிது நேரம் அமைதி தான் பதிலாக கிடைத்தது. பிறகு சமாளிக்கத் தொடங்கினார்.
அப்போது நான் கூறியது ஒரு எளிய உண்மை, "நீங்கள் கற்றுக் கொண்ட அனைத்தும் அவரிடம் சென்றால், அவரின் அரசியல் நிலைமை இன்னும் உறுதியானதாகிவிடும்." இன்று காலம் தாண்டி பார்த்தால்... அந்த வார்த்தைகளே என் காதில் எதிரொலியாக ஒலிக்கின்றன. இப்போது வெளியில் நடப்பதை கேட்டு நான் மகிழ்வதா? அழுவதா? என்று கூட தெரியவில்லை" என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications