சட்டசபை இருக்கை பிரச்சினை! ரசிக்கும் சபாநாயகர்! கண்ணீர் வடிக்கும் தொண்டர்கள்! பூங்குன்றனின் பதிவு
சென்னை: ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் சேருவதற்கு வாய்ப்பு கொடுக்கிறாரா சபாநாயகர் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பூங்குன்றன் வெளியிட்டுள்ள பதிவில்;- சட்டசபையில் அதிமுக-வின் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை குறித்த பிரச்சனையை முடித்து வைக்கும் எண்ணத்தில் சபாநாயகர் இல்லை. காரணம் அவர் இரு தலைவர்கள் படும்பாட்டை ரசித்து கொண்டு இருக்கிறார். அவர் பேசும்போது இவரும், இவர் பேசும் போது அவரும் காட்டும் முகபாவனைகளைப் பார்த்து தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். காரணம் அதிமுகவின் நிலை சட்டசபையில் பரிதாபமாகத் தோன்றுகிறது.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்ந்துவிட்டு, திடீரென ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வரும்போது ஒருவரை ஒருவர் பார்ப்பது எவ்வளவு கஷ்டம். குடும்பத்தினரோ இவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள். இருவரும் பிடிவாதமாக இருக்கலாம் அல்லது ஒருவர் பிடிவாதமாக இருக்கலாம்; பிரிவதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். யோசிப்பதற்கு, நீதிபதியோ மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பார். அப்படிதான் சபாநாயகரும் வாய்ப்பு கொடுக்கிறாரோ..!

நீங்கள் இணைய வேண்டும் என்று இன்றும் கீழ்மட்டத் தொண்டர்கள் நினைக்கிறார்கள். அப்படி உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் இருவரும் சட்டசபையின் இருக்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுங்கள். உங்கள் இருவரையும் இப்படி பார்ப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. அம்மாவின் கம்பீரத்தை சட்டசபையில் பார்த்து வியந்த கண்கள் தானாகவே இன்று கண்களை மூடிக்கொள்கின்றன என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications