முளையிலேயே "இலை" கிள்ளிய பூவை ஜெகன் மூர்த்தி.. பாஜக தலையில் "இடி"? தலைக்கு தில்லை பார்த்தீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் இணைய போகிறது என்றாலும், பூவை ஜெகன் மூர்த்தி பேசிய பேச்சு, பாஜகவை அதிர வைத்து வருகிறது.. என்ன காரணம்?

அதிமுக - பாஜக கூட்டணி அன்று முறிந்ததுமே, அதிர்ந்து போன கூட்டணி தலைவர்களில் பூவை ஜெகன் மூர்த்தியும் ஒன்று.. அந்தவகையில், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தவர்களுள் பூவை ஜெகன் மூர்த்தியும் முக்கியமானவர்...

Poovai jagan moorthy alliance with Edappadi Palanisamy and Why did Puvai Moorthy slams BJP, PM Modi

கூட்டணி ஆதரவு: எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட்டால்தான் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியும் என்று செய்தியாளர்களிடம் சொல்லிகொண்டே வந்தவரும் மூர்த்திதான.

ஆனால், அவரது எல்லா ஆசையுமே நிராசையாகிவிட்டது.. எனினும் தேர்தல் நெருங்கி வருவதாலும், கூட்டணி குறித்த முடிவை எடுக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டதாலும், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது புரட்சி பாரதம் கட்சி.. அதிமுக தலைமையிலான கூட்டணியுடன் எம்பி தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக பூவை ஜெகன் மூர்த்தி கடந்த செப்டம்பர் மாதமே வெளிப்படையாக சொல்லிவிட்டதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.

3 தொகுதிகள்: இத்தனைக்கும், அதிமுக, பாஜக என 2 கட்சிகளுக்குமே தோழமை தலைவர்களான ஜிகே வாசன், ஜான் பாண்டியன் போன்றவர்கள் தங்கள் முடிவை அறிவிக்காமலேயே இருந்தனர். இவர்கள் 2 நாட்களுக்கு முன்புதான் ஆதரவை பாஜகவுக்கு வழங்கினார்கள். அப்படியிருக்கும்போது, எந்தவித குழப்பமுமில்லாமல், முதல் நபராக, எடப்பாடிக்கு ஆதரவை கடந்த செப்டம்பர் மாதமே அளித்திருந்தார் பூவை மூர்த்தி..

சில நாட்களுக்கு முன்புகூட செய்தியாளர்களிடம் பேசிய மூர்த்தி, அதிமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து சில நாட்களில் பேசி உறுதி செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஒருவேளை, விழுப்புரம் , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏதாவது ஒன்றை புரட்சி பாரதம் கேட்க போவதாகவும் தகவல் வெளியானது.

மத அரசியல்: இப்போதும் இதே 3 தொகுதிகளையே தங்களுடைய விருப்பப்பட்டியலாக அதிமுகவிடம் அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டிருக்கிறாராம் பூவை மூர்த்தி.

இதுகுறித்து ஜெகன் மூர்த்தி முலும் சொல்லும்போது, "இன்னமும் அதிமுக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஆனாலும் திருவள்ளூர் எங்களது சொந்த தொகுதி என்பதால் அதை நிச்சயம் கேட்டு வெற்றிபெறுவோம்..

என்ன காரணம்: அரசியலமைப்பு சட்டத்தை வெளிப்படையாக மீறி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஒரு மதத்தை மட்டுமே வைத்து அவர் வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார். இந்து மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது... நான் கூட இந்து தான்.. ஆனால் பாஜகவின் மத அரசியலை நான் ஆதரிக்கவில்லை..

திமுக வெல்லக் கூடாது என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக உள்ளது. பாஜக ஜெயிக்காது என பிரதமர் மோடிக்கே தெரியும். அதனால்தான், அதிமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை என்று இந்த கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ளார்" என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

கருத்து: ஜெகன் மூர்த்தியின் இந்த பேச்சினை பாஜக தரப்பில் உற்றுகவனித்து வருகிறது. காரணம், ஏற்கனவே, ஒருமுறை, பாஜக குறித்து ஜெகன் மூர்த்தி பேசியிருந்த கருத்து, பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அதில், "தமிழக அரசியலை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களைவிட தனித்துவமானது, இங்கு திராவிடக் கட்சிகளை மீறி தேசியக் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது.. பாஜக தலைமையில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவு.. ஆனால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை குறைத்து எடை போட முடியாது, காரணம் அந்த கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது" என கூறி பலரையும் அன்றே கவனிக்க வைத்தவர்.

பாஜக கவனம்: இப்போது, மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்வதை வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்..
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கேவி குப்பம் என்று சொல்லப்படும் கீழ்வைத்தினான்குப்பம் தொகுதியில் பூவை மூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.. ஆனால், அப்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்.. இந்த முறையும் இரட்டை இலை சின்னத்திலேயே களமிறங்குவார் என்று தெரிகிறது..

இரட்டை இலை: அதே இரட்டை இலை + ஜெயலலிதாவை முன்னிறுத்தியே இந்த முறையும் ஓட்டு கேட்கும் நிலைமை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், திடுதிப்பென்று யாருமே எதிர்பார்க்காத வகைய்ல, பிரதமர் மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதா 2 ஆளுமைகளை பற்றி புகழ்ந்து பேசியது, அதிமுகவுக்கே அதிர்ச்சியை தந்துவிட்டது.

தேர்தல் நேரத்தில், எம்ஜிஆர், ஜெலலிதாவை பாஜக புகழ்ந்துள்ளது அதிமுகவுக்கே தற்போது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.. அதிமுகவின் ஓட்டுக்களை கணக்கு செய்தே, பிரதமர் மோடி இவ்வாறு பேசியதாக கருதப்பட்டாலும், அதிமுகவுக்குள்ளிருக்கும் சில "பாஜக ஆதரவாளர்களையும்" பிரதமரின் பேச்சு யோசிக்க வைத்துள்ளது.

நெருடல்: மொத்தம், இந்த முறை தேர்தலில், இரட்டை இலையை பயன்படுத்தி ஓட்டுக் கேட்கபோகும் அத்தனை அதிமுக வேட்பாளருக்குமே, ஒருவித நெருடலையே தந்துவிட்டு போயுள்ளது பிரதமரின் திருப்பூர் உரை..

அதுமட்டுமல்ல, இனி வரும் நாட்களில், குறிப்பாக, அதிமுகவின் பிரச்சாரங்களில், எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரின் பெயர்களுமே இந்த முறை சற்று அதிகமாகவே எதிரொலிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அந்தவகையில், பாஜகவின் வியூகத்தை முறியடிக்கும் வகையிலும், பிரதமரின் "அதிமுக புகழ்ச்சிக்கு" விளக்கம் தரும்வகையில், பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது பூவை ஜெகன் மூர்த்தியின் பேச்சுக்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+