சூப்பர் திட்டம்னு நெனச்சோமே.. பேராபத்தா? பதைபதைபூட்டும் பிளாஸ்டிக் சாலைகள் -பூவுலகின் நண்பர்கள் பகீர்
சென்னை: தரமான சாலைகளுக்கும், பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கும் தீர்வாக பார்க்கப்படும் பிளாஸ்டிக் சாலை திட்டத்தை பலரும் வியந்து கொண்டாடி வரும் அதனால் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அந்த அமைப்பு, "தமிழரின் மகத்தான கண்டுபிடிப்பு என்று ஊதிப் பெருக்கப்பட்ட மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிழிக் குப்பைகளை பயன்படுத்தி சாலைகள் அமைப்பது என்றால் மிகையாகாது. நிலத்தில் தூக்கி வீசப்படும் நெகிழியானது என்ன சீர்கேடுகளை உருவாக்குமோ அதைவிட மோசமான சூழல் சீர்கேட்டை நெகிழிச் சாலைகள் உருவாக்குகின்றன.

பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் குறைந்தபட்சம் ஒரு முகக்கவசம் கூட இல்லாமல் நெகிழிக் குப்பைகளை சாலைகளில் பயன்படுத்துவதற்காக நறுக்கிப் பொடியாக்கும் (shredder) எந்திரங்களில் பணிபுரிவதைப் பார்க்கவே மனது பதை பதைக்கிறது.
நச்சுப் பொருளான நெகிழியை, எளிதில் சூழலையும் உயிர்களையும் பாதிக்கும் நுண்ணெகிழியாக மாற்றுவதும், அதை சூடாக்கி இளக்குவதும், சூழலில் கலக்குமாறு சாலைகள் அமைப்பதும் எவ்விதத்தில் தீர்வாக இருக்க முடியும்? நெகிழி மாசை மேலும் தீவிரமாக்கும் நெகிழிச் சாலையானது ஒரு போலித்தீர்வு! அம்பலமாகட்டும் போலித்தீர்வுகள்!" என்று குறிப்பிட்டு உள்ளது.
அத்துடன் இந்த பிளாஸ்டிக் சாலைகளால் ஏற்படும் 5 பாதிப்புகளையும் அந்த அமைப்பு பட்டியலிட்டு இருக்கிறது. அப்படி என்ன பாதிப்பு என்று பார்ப்போம்.
1. நெகிழிச் சாலைகள் அமைக்க நெகிழியைச் சூடாக்கும் போதும், சாலையானது வெயிலில் சூடாகும் போதும் அது நச்சு வாயுக்களை வெளிப்படுத்துகிறது.
2. சாலைல் இருக்கும் நுண்ணெகிழித் துகள்கள் வெயிலிலும் மழையிலும் சிதைந்து சூழலில், குறிப்பாக மழைநீரோடு நிலத்தடி நீரில் கலக்கின்றன.
3. நெகிழிச் சாலைகள் அமைக்க நெகிழிக் குப்பைகள் தொடர்ந்து தேவைப்படுகின்றன. ஆகவே, அவை நெகிழி உற்பத்தியைக் குறைப்பதில்லை.
4. மறு சுழற்சி போன்ற சற்று மேம்பட்ட தீர்வுகளை செயல்படுத்துவதை நெகிழிச் சாலைகள் தடுக்கின்றன.
5. நெகிழிச் சாலைகள் அமைக்க அதிக நெகிழி தேவைப்படுவதால் இவை எவ்விதத்திலும் நெகிழி உற்பத்தியைத் தடுக்க உதவுவதில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications