க்ளவுஸ், மாஸ்க் கூட இல்லை.. கச்சா எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் மனித உரிமை மீறல்! எண்ணூரில் ஷாக்!
சென்னை: மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணியில் மனித உரிமை மீறல் ஏற்பட்டிருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

ஆனால் வட சென்னையின் எண்ணூர், எர்ணாவூர் பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. காரணம் வெள்ளம் வந்தபோது அத்துடன் கலந்து வந்த கச்சா எண்ணெய் கழிவுகள்தான். மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்த நிலையில், கச்சா எண்ணெய் கழிவுகளும் வீடுகளை சூழ்ந்தன. இதன் காரணமாக மூச்சுத்திணறல், தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்கிறது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் வெளியேற்றப்பட்டபோது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறியுள்ளது என்று விளக்கமளித்துள்ளது. இந்த விவகாரம் பெரியதாக வெடித்ததையடுத்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு கடந்த 9ம் தேதி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதனையடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது "எண்ணெய் கசிவு நடந்து 5 நாள் ஆன பின்னரும்கூட எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படவில்லை என அரசு கூறும் பதில் திருப்தி அளிக்கவில்லை. இது ஒரு நெருக்கடி நிலை என்பது தெரியவில்லையா?" என்று கேள்வியெழுப்பி, கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழக அரசு கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தொடங்கியது. ஆனால் இந்த பணியில் மனித உரிமை மீறல் ஏற்பட்டிருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.
அதாவது, "கழிமுகத்தில் தேங்கிய எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எண்ணெய் கசிந்த நிகழ்வே மனித உயிர்களையும் சுற்றுச்சூழலையும் துச்சமெனக் கருதியதால்தான். அப்பேரிடரை மறுசீரமைக்கும் பணியில் இப்படி ஒரு மனித உரிமை மீறல் நடப்பது கண்டனத்திற்குரியது. இதுவா போர்க்கால அடிப்படையில் எண்ணெய் கழிவை அகற்றுவது?" என்று x சோஷியல் மீடியா தளத்தில் பூவுலகின் நண்பர்கள் குழு கேள்வியெழுப்பி உள்ளது.
கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட இந்திய கடற்படை, சுமார் 20 ச.கி.மீ பரப்பளவில் கழிவுகள் பரவியிருப்பதாக கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications