ஒரு கட்சியால் ஒரு நகரின் வெப்பத்தை 2 டிகிரி உயர்த்த முடியுமா.. அண்ணாமலைக்கு சுந்தரராஜன் கேள்வி
சென்னை: ஒரு கட்சியால் ஒரு நகரின் வெப்பத்தை 2 டிகிரி உயர்த்த முடியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.சுந்தரராஜன் எக்ஸ் வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "கோவையின் வெப்பத்தை 1.5-2 டிகிரி அதிகரித்ததுதான் திராவிட கட்சிகளின் சேவை"- @annamalai_k

முதல் கேள்வி, ஒரு கட்சியால் ஒரு நகரத்தின் வெப்பத்தை 2 டிகிரி அதிகரிக்க முடியுமா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா உங்களுக்கு?
உங்களுக்கு கொஞ்சமாவது அறிவியல் அறிவு இருந்தால், @IPCC_CH யின் அறிக்கையை படித்துப்பாருங்கள், உலக சராசரி வெப்பநிலை 1.45டிகிரி அதிகரித்துவிட்டதாக "ஐபிசிசி அறிவித்துவிட்டது.
"அதுசரி, உங்களுக்கு எப்படி தெரியும், உங்க தலைவர்தான், "We have only changed, climate has not changed" என்று சொன்னவராச்சே. உங்களுக்கு எப்படி காலநிலை மாற்றம் பற்றியெல்லாம் தெரியும்?
ஆத்மநிர்பர் பாரத் என்கிற பெயரில், மத்திய இந்தியாவில் உள்ள 1.75லட்சம் ஹெக்டர் காடுகளை பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்தவர்களுக்கு வெப்ப உயர்வை பற்றியெல்லாம் கவலை எதற்கு ? என சுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் களமிறங்குகிறார் அண்ணாமலை. அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில் கோவையில் என்ன அடிப்படை மாற்றத்தை திமுக கொண்டு வந்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் சூடானதுதான் மிச்சம். ஒரு குளுமையான அமைதியான ஊர் கோவை. இன்று 2 டிகிரி, 3 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது. டூவிலரில் கூட போக முடியவில்லை.

மாஸ்க் போடாமல் முகத்தில் ஒரு தூசு படாமல் இங்குள்ள சாலைகளில் போக முடியுமா, ஒரு ஆரோக்கியமான சாலைகள் இருக்கிறதா? ஒரு நல்ல பார்க் இருக்கிறதா, குழந்தைகளோடு போக முடியுமா, திமுக ஆட்சியாளர்கள் என்ன செய்திருக்கிறார்கள். 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு தேர்தல் நேரத்தில் செலவு செய்ய வைத்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 10 ஆம் தேதி திமுகவும் அதிமுகவும் ஒன்றாக சேர்ந்து பங்காளி கட்சியின் சுய உருவத்தை பார்ப்பீர்கள். இவ்வாறு அண்ணாமலை பேசியிருந்தார். இதற்குத்தான் சுந்தரராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications