Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பிரபல தங்க நகைக்கடை தந்த ட்விஸ்ட்.. ஒரு லட்சம் போட்டால் மாதம் 12000 வட்டி.. 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இதன்துணை நிறுவனம் ஏ.ஆர்.டி. டிரஸ்ட் பிராபிட் கம்பெனி, நகைக்கடை, வணிக வளாகம், நிதி வர்த்தகம் போன்றவற்றை நடத்துவதாக கவர்ச்சி விளம்பரம் செய்தது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என அறிவித்தது. இதில் சுமார் 60 கோடி பணம் சம்பாதித்தவர்கள் அப்படியே ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்த ரூ.60 கோடி மோசடி வழக்கில் பெண் உள்பட மேலும் 3 பேரை கைது செய்தனர்.

சதுரங்க வேட்டை படம் பாணியில் சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருக்கிறது. அந்த மோசடி நிறுவனத்தின் துணை நிறுவனத்தை நம்பி பல கோடி அளவிற்கு மக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். ஒரு லட்சம் செலுத்தினால் மாதம் 12000 வட்டி என்ற ஆசை வார்த்தையில் ஏமாந்துள்ளார்கள். ஒரு லட்சத்திற்கு அதிகபட்சம் சுமார் 8% முதல் 9.5% வரை தான் நிறுவனங்களால் தரமுடிகிறது. ஆனால் 12000 என்பது 144% வட்டியாகும். குறுகிய காலத்திலேயே நிறுவனம் ஓடிவிடும் என்று தெரியாமல் மக்கள் ஏமாந்துள்ளனர்.

Popular gold jewellery company in Chennai involved in fraud 3 people have been arrested

சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டிருக்கிறது.. அதன் துணை நிறுவனம் ஏ.ஆர்.டி. டிரஸ்ட் பிராபிட் கம்பெனியும் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்துள்ளன. அதில், எங்கள் நிறுவனங்கள் சார்பில், நகைக்கடை, வணிக வளாகம், நிதி வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடத்தப்படுகிறது. அவற்றில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது. கவர்ச்சியான இந்த விளம்பரத்தை பார்த்த ஏராளமானோர் அதில் முதலீடு செய்திருக்கிறார்கள்..

ஆனால் மேற்கண்ட அந்த நிறுவனத்தினர் முதலீடு செய்த பொதுமக்களுக்கு விபூதி அடித்ததுடன், ரூ.60 கோடிக்கும் மேல் பணத்தை சுருட்டியதாக புகார் எழுந்தது. முதலீடு செய்தவர்களுக்கு முறையாக வட்டி கொடுக்கவில்லை என்றும் அசலையும் திருப்பிதரவில்லை என்றும் சுமார் 500 பேருக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர் என்றும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, முதலில் சென்னை நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், அந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கண்ட மோசடி நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் தீவிர சோதனை நடத்தினாா்கள். ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் ரூ.7.87 லட்சம் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் சோதனையில் சிக்கியது. அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. மோசடி புகார் கூறப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆல்வின் ஞானதுரை, அவரது சகோதரர் ராபின் ஆரோன் மற்றும் விமல் ரஞ்சித் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோசடி நிறுவனங்களில் ஏஜெண்டுகளாக வேலை பார்த்து பொதுமக்களிடம் பணத்தை வாங்கி கொடுத்ததாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அந்தோணி விமல்ராஜ் (34), ஷமீர் அகமது (28), சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பிரேமாவதி (62) ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+