ஸ்டாலினின் பேரணி முடிவதற்கு முன்பாகவே போர் நிறுத்தம்.. தளபதியின் சாதனையில் இதுவும் ஒன்று.. கருணாஸ்
சென்னை: நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு சட்டசபைதேர்தலில் முன்னாள்முதல்வர் ஜெயலலிதா தந்த எம்எல்ஏ சீட்டில் ஜெயித்தவர், அப்போது தீவிரமாக அதிமுக ஆதரவாளராக இருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திமுக ஆதரவாளமாக மாறினார். அவர் திமுக மேடையில் பேசிய பேச்சு ஒன்று மிகப்பெரிய அளவில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தீவிரமான திமுக ஆதரவாளராக மாறிய கருணாஸ்,திமுக மேடையில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து அடிக்கடிபேசி வருகிறார்.அந்த வகையில் அவர் அண்மையில் பேசிய பேச்சு கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது. 'இந்திய ராணுவம் வெல்லும்' என்ற தலைப்பில் நடைபெற்ற பேரணியானது சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்றது. இதன் மொத்த தூரம் 4 கிலோ மீட்டர் ஆகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாக மாலை 5 மணிக்கு பேரணியை தொடங்கி 5.55 மணிக்கு போர் நினைவுச்சின்னம் வந்தடைந்தார். பேரணியின் முடிவில், ஒற்றுமையின் அடையாளமாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் லெப்டினண்ட் ஜெனரல் அனந்த நாராயணன், பிரிகேடியர் ரவி, பிரிகேடியர் ஜெயலட்சுமி, லெப்டினண்ட் கர்னல் ரமேஷ் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இந்த பேரணி குறித்து நடிகர் கருணாஸ் பேசுகையில், நன்றாக யோசித்து பாருங்கள். சண்டை நடந்து கொண்டிருக்கிறது.. ராணுவ வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் இணைத்து ஒரு ஐந்து கிலோ மீட்டருக்கு பேரணியை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். பேரணி முடிவதற்கு முன்பாகவே போர் நிறுத்தம் அறிவித்துவிட்டார்கள்.. அதை புரிந்து கொள்ளுங்கள்.. தளபதியின் சாதனையில் இதுவும் ஒன்று" இப்படியாகபேசியிருந்தார். இந்த பேச்சை பாஜக ஆதரவாளர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் ஷேர் செய்து நடிகர் கருணாஸை கிண்டல் செய்து வருகிறார்கள்.
பிரபல யூடியூபரான பிரசாந்த் ரங்கசாமி அடிக்கடி அரசியல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் கருணாஸ் குறித்த வீடியோவை ஷேர் செய்த அவர், "ஒரு சீட்டுக்கு என்ன என்ன பேச வேண்டி இருக்கு! கருணாஸ் மாம்ஸ்" என்று கூறியுள்ளார். பல எதிர்க்கட்சி நிர்வாகிகளுமே எம்எல்ஏ சீட்டுக்காகவே இப்படி எல்லாம் முதல்வர் ஸ்டாலின் குறித்து பாராட்டி பேசுவதாக குற்றம்சாட்டி பதிவிட்டு வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications