இன்னைக்கு லைட்டு.. அடுத்த 2 நாள் வெயிட்டா இருக்கு! மழை விட்டு விளாசப்போகுது - வெளியான வானிலை அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.09.2023 மற்றும் 24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.09.2023 மற்றும் 26.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 7, திருப்பத்தூர் (சிவகங்கை), விருதுநகர் தலா 6, திருமானூர் (அரியலூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), குப்பணம்பட்டி (மதுரை), சிவகங்கை (சிவகங்கை), பூதலூர் (தஞ்சாவூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) தலா 5, கொடைக்கானல் (திண்டுக்கல்), சென்னிமலை (ஈரோடு), பேரையூர் (மதுரை), பரமத்திவேலூர் (நாமக்கல்), விராலிமலை (புதுக்கோட்டை), தம்மம்பட்டி (சேலம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) தலா 4, திண்டுக்கல், கரூர் பரமத்தி (கரூர்), பாலவிடுதி (கரூர்), உசிலம்பட்டி (மதுரை), மங்களபுரம் (நாமக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), நந்தியார் (திருச்சிராப்பள்ளி), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), திருச்சுழி (விருதுநகர்), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), விருதுநகர் AWS தலா 3, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கோடிவேரி (ஈரோடு), நம்பியூர் (ஈரோடு), பஞ்சப்பட்டி (கரூர்), எழுமலை (மதுரை), அன்னவாசல் (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை), குடிமியான்மலை (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), குண்டாறு அணை (தென்காசி), வல்லம் (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), ஆம்பூர் (திருப்பத்தூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), அருப்புக்கோட்டை (விருதுநகர்) தலா 2, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), சத்தியமங்கலம் (ஈரோடு), கடவூர் (கரூர்), மயிலம்பட்டி (கரூர்), தோகமலை (கரூர்), கல்லந்திரி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), ராசிபுரம் (நாமக்கல்), கீரனூர் (புதுக்கோட்டை), புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், அடவினனார்கோயில் அணை (தென்காசி), கல்லணை (தஞ்சாவூர்), தஞ்சாவூர், ஆதார் எஸ்டேட் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), தேவாலா (நீலகிரி), கேத்தி (நீலகிரி), கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), திருச்சி விமானநிலையம், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), கடம்பூர் (தூத்துக்குடி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), மேலாலத்தூர் (வேலூர்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), காரியாபட்டி (விருதுநகர்), தஞ்சாவூர் PTO, ராஜபாளையம் (விருதுநகர்), சிவகாசி (விருதுநகர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), சிறுகாமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் 20.09.2023 மற்றும் 21.09.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 20.09.2023: லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications