தவெக - நாதக கூட்டணி? வாய்ப்பை அமைத்து கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவுக்கு எகிறும் அழுத்தம்!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை கூட்டணி வைக்க வாய்ப்புகள் உள்ளதாக சில பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் இணையும் பட்சத்தில் அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்பதோடு, 2வது இடத்தை பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்போம் என்று கூறி இருக்கின்றன.

அதிமுகவுக்கு பின்னடைவு
ஆனால் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக ஆகியோர் தங்கள் தலைமையில் கூட்டணி என்று அறிவித்துவிட்டனர். இதனால் சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜகவோடு கூட்டணி அமைத்திருப்பதால், அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஒவ்வொரு முறையும் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது.
கதவுகளை மூடிய எடப்பாடி பழனிசாமி
இதனால் பாஜக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூட்டணி கதவுகளை மூடிவிட்டார். இதனால் 4 முனைப் போட்டியாக அல்லாமல், இருமுனைப் போட்டியாக மாற்ற எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். நாதக மற்றும் தவெக தனித்து போட்டியிட்டால், அது திமுகவுக்கு லாபமாக முடியும். இதனை வைத்து பார்க்கையில், நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
நாதக வாக்கு சதவிகிதம்
நாடாளுமன்றத் தேர்தலிலேயே 8 சதவிகித வாக்குகளை சீமான் பெற்றிருந்தார். தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக நாதக உருவாகி இருக்கும் நிலையில், தவெகவுக்கு இளைஞர்கள், பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. முதல்முறையாக அரசியல் களத்தில் விஜய் இறங்குவதால், விஜய்-க்கு மிகப்பெரிய வரவேற்பு வாக்காளர்கள் மத்தியில் இருக்கும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்கள்
தென் மாவட்டங்களில் ஏற்கனவே அதிமுகவின் கட்டமைப்பு மோசமாகி வரும் சூழலில், நாம் தமிழர் மற்றும் தவெக தென் மாவட்டங்களில் வலுப்பெற்று வருகின்றன. இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், அதிமுகவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் என்று பார்க்கப்படுகிறது. பல தொகுதிகளில் இந்த இரு கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்கள் வெல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
கூட்டணிக்கு வாய்ப்பு?
சீமான் மற்றும் விஜய் இருவருமே தனித்து போட்டியிட உள்ளதாக கூறியுள்ளனர். தவெக கொள்கைத் தலைவராக பெரியார் இருப்பதால் தங்களால் இணைந்து பணியாற்ற முடியாது என்று சீமான் கூறி இருக்கிறார். ஆனால் தேர்தல் நெருங்கும் போது கள நிலவரங்களை அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் நிச்சயம் அறிவார்கள். இதனால் வரும் மாதங்களில் நாதக - தவெக கூடுதல் நெருக்கம் காட்ட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications