சென்னை திரும்பிய வாகன ஓட்டிகளுக்கு உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் இன்ப அதிர்ச்சி! நோ கட்டணம்
சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டோல்கேட்களில் அதிகமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை பார்க்க முடிந்தது. இதனால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை டோல்கேட்டில் வாகனங்கள் கட்டணம் இன்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் புறப்பட்டுச் சென்றனர். சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை, கடந்த இரு தினங்களாக கூட்ட நெரிசல் இன்றி பரபரப்பு இல்லாமல் காட்சியளித்தது.

சென்னை திரும்பும் மக்கள்
ரயில்கள், பேருந்துகள், கார்கள் என பயணிகள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி சாரை சாரையாக வாகனங்களில் அணிவகுத்து சொந்த ஊர் சென்றனர். தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாட ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாளான இன்று (அக். 21) பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் பலரும் இன்று சென்னை திரும்பினர். இதனால், தென் மாவட்டங்களில் இருந்து கிளம்பும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி பேருந்து நிலையங்களில் எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டமே இருந்தது. ரயில் நிலையத்திலும் இதே நிலை நீடித்தது.
அதிகரித்த போக்குவரத்து நெரிசல்
இதுபோல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. சென்னையிலிருந்து திருச்சி ரூட்டில் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்ட நிலையில், எதிர்திசையில் வரிசையாக வாகனங்கள் படையெடுத்து வந்தன. இதனால் சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
சுங்கச்சாவடியில் கட்டணம் இன்றி அனுமதி
வழக்கமாக சென்னையின் நுழைவு போயின்ட் போல இருக்கும் பரனூர் டோல் கேட்டில் கடுமையான நெரிசல் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக உளுந்தூர்பேட்டை டோல் கேட்டிலும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் இன்றி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை பார்வையிட மாவட்ட கண்காணிப்பாளர் மாதவன் வருகை தந்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் இருந்ததால், வாகனங்கள் விரைந்து செல்ல ஏற்பாடு செய்யுமாறு சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து சுங்கச்சாவடியில் தடுப்புகள் நீக்கப்பட்டன. இதனால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் இன்றி பயணித்தன.
பாதுகாப்பு பணியில் போலீசார்
டோல் கேட்டில் கட்டணம் செலுத்த நின்றால் வரிசையாக வாகனங்கள் தேங்கும் என்பதால் இந்த ஏற்பாட்டை சுங்கச்சாவடி நிர்வாகம் செய்தது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்தூர்பேட்டை டோல் கேட்டை கடந்து வருவதால் சுமார் 50 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், விபத்து ஏற்படாமல் தடுக்க ரோந்து போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நாளை பள்ளிக்கு விடுமுறை
இதற்கிடையே, சென்னையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு நாளை (அக். 22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை திரும்ப திட்டமிட்ட பயணிகள் பலரும் கடைசி நேரத்தில் தங்கள் பயண திட்டத்தை ஒத்திவைத்தனர். சென்னையில் தொடர் மழை பெய்து வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் கூடுதலாக ஒருநாள் சொந்த ஊரில் பொழுதை கழிக்கலாம் என திட்டமிட்ட பயணிகள், பயணத்தை ரத்து செய்தனர். இதனால், வழக்கமாக தீபாவளி விடுமுறை முடிந்து வரும் பயணிகள் கூட்டத்தை விட இன்று கூட்டம் சற்று குறைவாக இருந்ததாக பேருந்து ஊழியர்கள் தெரிவித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications