Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்கவுண்டை உடனே செக் பண்ணுங்க.. தமிழக அரசு வழங்கிய உதவித் தொகை! இன்னும் 10 நாள் மட்டுமே இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் கீழ் ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆதிதிராவிடர், பட்டியலின பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கு செலுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் பிற கல்வி உதவித்தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2024 -2025 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு 30.05.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களான ஆதிதிராவிடர், பட்டியலின பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு முதலாம் வகுப்பு முதல் முதுநிலை மற்றும் பிஎச்.டி வரை பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சமூக-பொருளாதார, கல்வி வளர்ச்சி, சமூக கண்ணியம் மற்றும் சுய நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பயனாளிகள்/மாணவர்களின் சாதி மற்றும் வருமான உச்சவரம்பை வலியுறுத்தாமல் சில திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

tn govt Scholarship chennai

பயனாளிகளின் சமூகம், வருமானம் மற்றும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரும் நிறுவனங்களின் (அரசு/அரசு உதவி பெறும்/தனியார்) வகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஏழைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2024 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது 2024 2025 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக 30.5.2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்காத ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் யூனிவர்சிட்டி மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என்ற umis.tn.gov.in இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.

umis.tn.gov.in என்ற கல்வி உதவித்தொகை இணையதளத்தில் லாகின் செய்து விண்ணப்பிக்கலாம். கல்விச்சான்றுகள், ஆதார் எண், சாதி சான்றிதழ், கல்வி நிறுவனம் வழங்கிய சான்று ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை பதிவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்கள் மட்டுமே கணக்கில் எடுத்த கொள்ளப்படும் என்பதால் கல்வி உதவித்தொகை விடுவிப்பதற்கு முன் மாணவர்கள் அனைவரும் தங்கள் வங்கிக் கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பத்தில் பிழைகள் இருந்தால் அதனை மாணவர்கள் உதவித் தொகை இணையதளத்திலேயே சரி செய்து கொள்ளலாம் தற்போது. காலக்கெடு முப்பதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்கள் எந்தவித அச்சமும் பிழையும் இன்று விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+