போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி திட்டத்தில் மாதம் ரூ.2000 சேமித்தால் ரூ.1.42 லட்சம் லாபம்! மத்திய அரசே கியாரண்டி
சென்னை: தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறு சேமிப்புத் திட்டங்கள் எப்போதும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு முக்கியமான திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி (Post Office Recurring Deposit) எனப்படும் தொடர் வைப்பு நிதித் திட்டம். இந்த திட்டத்தை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தொடர் வைப்பு திட்டமானது மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டியுடன் கூடிய ஒரு மிகப்பெரிய தொகையை உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்க்கும் சூப்பரான திட்டமாகும்.

போஸ்ட் ஆபீஸ் திட்டம்
வங்கிகளை விட தபால் நிலையங்களில் வட்டி விகிதம் சற்று கூடுதலாகவும், அதே சமயம் மத்திய அரசின் நேரடிப் பார்வையில் இருப்பதால் முதலீட்டிற்கு 100 சதவீத பாதுகாப்பும் கிடைக்கிறது என்பது இதிலுள்ள கூடுதல் ஸ்பெஷாலிட்டியாகும.
இந்த ஆர்.டி. திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் வெறும் 100 ரூபாயில் இருந்தே ஒரு நபர் தனது சேமிப்பை தொடங்க முடியும். அதிகபட்ச முதலீட்டிற்கு என்று எந்தவொரு உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், அவரவர் வசதிக்கேற்ப எவ்வளவு பெரிய தொகையை வேண்டுமானாலும் மாதந்தோறும் முதலீடு செய்யலாம்.
ஆர்.டி. சேமிப்பு திட்டம்
ஒரு நபர் மாதா மாதம் ரூ.2000 வீதம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு அதாவது 60 மாதங்களுக்கு இந்த ஆர்.டி திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.. 5 ஆண்டுகள் முடிவில் அவருக்கு மொத்தம் ரூ.1,42,732 கிடைக்கும்.. இதில் அவர் முதலீடு செய்த அசல் தொகை ரூ.1,20,000 மட்டுமே.. மீதமுள்ள ரூ.22,732 அவருக்கு வட்டியாகக் கிடைக்கிறது..
இந்த வைப்பு நிதிக்குக் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு அசலுடன் சேர்க்கப்படுவதால், கூட்டு வட்டி முறையில் பணம் மிக வேகமாக வளர்கிறது.. அதிகபட்ச முதலீட்டிற்கு என்று எந்தவொரு உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், அவரவர் வசதிக்கேற்ப எவ்வளவு பெரிய தொகையை வேண்டுமானாலும் மாதந்தோறும் முதலீடு செய்யலாம்..
மத்திய அரசே கியாரண்டி
பொதுவாக இந்த ஆர்.டி திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒருவேளை 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் அந்த தொகையை எடுக்க விருப்பமில்லாவிட்டால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் தபால் நிலையங்களில் வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் வட்டி விகிதமானது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படுவதால், கூட்டு வட்டி முறையில் உங்கள் பணம் மிக வேகமாக வளர்வதற்கு இது வழிவகுக்கிறது.
இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் இணைந்து ஒரு வருஷம் நிறைவடைந்த பிறகு, உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதம் வரை கடனாக பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது... முககியமாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் அல்லது அவசரத் தேவைகள் ஏற்படும்போது இது மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
குறைந்த முதலீடு, அதிக லாபம்
அதேபோல், மைனர் குழந்தைகளின் பெயரிலும் அவர்களது பாதுகாவலர்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கி அவர்களின் எதிர்காலத்திற்காக சேமிக்க முடியும். தபால் நிலையங்களில் சேமிக்கும்போது வரி சலுகைகளும் கிடைப்பதால், மற்ற தனியார் நிதி நிறுவனங்களை விட இது மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது..
தனிப்பட்ட ரீதியில் இந்தத் திட்டத்தை பற்றி பார்க்கும்போது, இது ஒரு ஒழுக்கமான சேமிப்புப் பழக்கத்தை மக்களிடையே உருவாக்குகிறது என்றே சொல்லலாம். மொத்தமாக பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள், மாதந்தோறும் ஒரு சிறிய பகுதியை ஒதுக்குவதன் மூலம் ஒரு சில ஆண்டுகளில் மிகப்பெரிய நிதியை உருவாக்க இது மிகச்சிறந்த வழியாகும்.
கோடீஸ்வரர் யோகம்
அதுவும் இன்றைய காலகட்டத்தில் பங்குச்சந்தை போன்ற அபாயகரமான முதலீடுகளை விட, எந்தவிதமான நஷ்டமுமில்லாமல் சீரான லாபத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பு கவசமாகும். ஒவ்வொரு மாதமும் நாம் செய்யும் ஒரு சிறிய சேமிப்பு, எதிர்காலத்தில் அவர்களது கனவுகளை நனவாக்க உதவும்.
இன்றைய பொருளாதார சூழலில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், பிற்கால தேவைகளை தடையின்றி பூர்த்தி செய்யவும் இதுபோன்ற அரசு திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் புத்திசாலித்தனமான முடிவாகும். போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி திட்டத்தில் இப்போது வழங்கப்படும் வட்டி விகிதமானது மற்ற நிலையான சேமிப்புத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் போட்டியாக இருப்பதால், சிறு முதலீட்டாளர்கள் தயக்கமின்றி இதில் இணையலாம். இந்த நிம்மதியான, லாபகரமான தபால் நிலையத் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் இணையலாம்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications