போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்.. அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்க போறீங்களா? அப்ப இதை நோட் பண்ணிக்குங்க
சென்னை: சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்று விரும்புபவர்கள், வங்கிகளில் உள்ள வட்டி விகிதங்களை ஆராய்ந்து பார்த்து தான் அவற்றை தேர்வு செய்கின்றனர்... அதில் ஒன்றுதான், அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டம்.. இதில் பலரும் இணைந்து பலன்களை பெற்று வருகின்றனர்.. என்ன காரணம்?
வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோமோ, அதுபோல, அரசுக்கு சொந்தமான தபால் நிலையங்களிலும் சேமிப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம். தபால் நிலையங்களிலேயே சிறுசேமிப்பு திட்டங்கள் நிறைய இருக்கின்றன.

அதில் ஒன்றுதான், தபால் அலுவலக சேமிப்பு திட்டமாகும்.. இந்த சேமிப்பு திட்டத்தில் 4 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை துவங்க வேண்டுமானால், குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்தால் போதும்.. அதாவது, நாம் வங்கியில் எப்படி மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கிறோமோ, அதுபோல, போஸ்ட் ஆபீஸிலும், இந்த தபால் நிலைய சேமிப்பு கணக்கில் ரூ.500 எப்போதுமே இருக்க வேண்டும்.
நன்மைகள்: ஒருவேளை இந்த மினிமம் பேலன்சை, நீங்கள் கவனிக்காமல் எடுத்துவிட்டால் அல்லது பராமரிக்க தவறிவிட்டால் அதற்கு உங்களிடம் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தினால், பாதுகாப்பு கிடைக்கிறது.. உத்தரவாதம் கிடைக்கிறது.. வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது.
யார் யார் சேரலாம்: இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.. அனைத்து வயது பிரிவினருக்குமே தகுதி உள்ளது.. வருமான வரி சட்டம் பிரிவு 80TTA இன் கீழ் 10,000 ரூபாய் வரை வட்டி தொகை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சான்றிதழை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ பாஸ்புக் வழங்குவதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்...
அதேபோல, கணக்கு பரிமாற்றம் மற்றும் கணக்கு உறுதிமொழி கட்டணம் ஒவ்வொன்றும் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். காசோலையை தவறாக பயன்படுத்தினால் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். டூப்ளிகேட் செக் புக் பெற வேண்டுமானால், ரூ.50 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வசதிகள்: அஞ்சலக சேமிப்புக் கணக்கு திட்டத்தில் காசோலை, ஏடிஎம் கார்டு, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆதார் இணைப்பு, அடல் பென்சன் திட்டம், சுரக்ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதேபோல, இந்த திட்டத்தில், நினைத்த நேரத்தில் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. மிகவும் பாதுகாப்பாகவும், உபயோகமாகவும் இருக்கும் இந்த சேமிப்பு கணக்கில் பலரும் கணக்கு தொடங்கி வருகின்றனர்.
ஆவணங்கள்: தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் கணக்கினை தபால் நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்..
குறிப்பாக, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் தேவைப்படும். வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் செய்யப்பட்ட நிலையில், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications