"வாக்குச்சாவடிக்கு வர வேண்டாம்!" வீடு தேடி வரும் தேர்தல் அதிகாரிகள்! தபால் வாக்கு சேகரிப்பு தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடு தேடி சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வாக்குகளை பெற 30+ சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இப்போது மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி முடிந்துவிட்ட நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

Postal Voting Maduranthakam Bypolls

தேர்தல் ஆணையம்

இதற்கிடையே 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு நேரில் வருவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு குழுக்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றன. இரு தொகுதிகளிலும் அதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

முதற்கட்டமாக தாராபுரம் தொகுதியில் இன்று (செப். 22) இந்தப் பணி தொடங்கியது. அங்கு மொத்தம் 1,236 தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலுவலர்கள் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

போட்டி

2026 சட்டப்பேரவை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில வாரங்களிலேயே இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால் இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதே இரு முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் இப்போது தவெக சார்பில் வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள்.

இப்போது நடைபெறும் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுகவில் இருந்து ஐ. பரந்தாமன், அதிமுக சார்பில் கனிதா சம்பத் போட்டியிடுகிறார்கள். தாராபுரம் தொகுதியில் தவெகவில் இருந்து பி. சத்தியபாமா, திமுக சார்பில் எஸ். சுகன்யா, அதிமுகவில் இருந்து கே. பானுமதி போட்டியிடுகிறார்கள். இது தவிர நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதனால் அங்கு 5 முனை போட்டி நிலவுகிறது.

2026 தேர்தல்

2026 தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக சார்பில் போட்டியிட்ட எஸில் கேத்தரின் எஸில்மலை 62,090 வாக்குகளும், திமுகவின் எஸ். அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளும் பெற்றனர். தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் இந்திராணி 64,373 வாக்குகளும், தவெகவின் கௌரி சித்ரா 46,438 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

ஏன் முக்கியம்

விஜய் தலைமையிலான அரசுக்கு இது முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியமானதாக மாறியுள்ளது. தேர்தலில் வென்ற சில வாரங்களில் தங்கள் பதவியை ராஜினாமா செய்த தவெகவில் ஐக்கியமானவர்கள் என்பதால் தொகுதியில் சற்று அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஒரு முக்கிய பிரச்சனையாகவும் மாறியிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி விஜய் பேக்கட்ரை வைத்து தவெகவில் வெல்ல முடியுமா என்பதே பிரதான கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+