"காணவில்லை.. காணவில்லை.. வட சென்னை எம்பியை காணவில்லை".. பரபர போஸ்டரால் டென்ஷன்!
வடசென்னை எம்பியை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது
சென்னை: "வடசென்னை எம்பியை, கொரோனாவிற்கும் காணவில்லை, புயலுக்கும் காணவில்லை, மழைக்கும் காணவில்லை" என்று பொதுமக்கள் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை ஆர்கே நகர் தொகுதியில்தான் இந்த போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர்.. கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், ஜெஜெ நகர், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, உள்ளிட்ட இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

"ஓர் முக்கிய அறிவிப்பு" என்ற தலைப்பிட்டு, "வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரையும், ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரையும் கொரோனாவிற்கும் காணவில்லை, புயலுக்கும் காணவில்லை, மழைக்கும் காணவில்லை, காணவில்லை.. இவர்களை அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்...இப்படிக்கு ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் வாக்காளர்களும், ஜெ.ஜெ.நகர் வாக்காளர்களும், எழில்நகர் வாக்காளர்களும்" என்று அந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சென்னையில் கொரோனா உட்பட புயல், மழை தாக்கி வரும் நிலையில், வடசென்னை தொகுதி எம்பியான கலாநிதி வீராசாமி இதுவரை தொகுதிக்குள் வந்து பொதுமக்களை சந்திக்கவில்லை என்பதையே ஆதங்க போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
ஆனால், இன்று வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த சமயத்தில் அவரை காணவில்லை என்று ஆர்கேநகரில் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பைதான் ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications