அரசியலுக்கு வர பிள்ளையார் சுழி போடுகிறாரா சூர்யா.. ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு + எதிர்பார்ப்பு

நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அரசியலுக்கு வர பிள்ளையார் சுழி போடுகிறாரா சூர்யா? ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு-வீடியோ

    சென்னை: தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த சூர்யா மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

    இவ்வளவு காலம் பொதுவான நடிகராகவே தன்னை முன்னிறுத்தி கொண்டவர், என்ஜிகே படம் மூலம் அரசியல் கதைகளுக்கு என்ட்ரி போட்டார். இதில் அரசியல்வாதியாகவே அவர் நடித்திருப்பார்.

    தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தனது சமூக கோபத்தையும் அவர் வெளிப்படையாகவே காட்டியிருந்தார். அதனால் அரசியலில் சூர்யா ஈடுபடுவார் என்ற தகவல் வெளியானாலும், அதை அவர் இன்னமும் மறுக்கவில்லைதான்.

    விமர்சனம்

    விமர்சனம்

    இந்த சமயத்தில்தான் புதிய கல்வி கொள்கை குறித்த விமர்சனத்தை முன் வைக்கவும், திரும்பவும் அரசியலுக்குள் நுழையும் அஸ்திவாரமாக இதனை சிலர் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதிமுகவின் எதிர்ப்பு, பாஜகவின் நெருக்கடிகள் என்று தொடர்ந்து விமர்சனங்களுக்குள் அடைபட்டு கொண்டுள்ளார். கிட்டத்தட்ட பாஜகவின் எதிர்ப்பு அரசியலை இவர் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    போஸ்டர்கள்

    போஸ்டர்கள்

    அதனால்தான் சூர்யாவின் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்து விட்டனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் பிள்ளையார் சுழி போடும் பிரதான இடம் மதுரை என்பதால், இங்குதான் சூர்யாவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    பாஜகவுக்கு மாற்று

    பாஜகவுக்கு மாற்று

    'அகரத்தின் முதல்வரே' என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் நம்மை ஈர்க்கிறது. கல்விக்கண் திறந்த காமராஜர், மக்கள் மனதை கவர்ந்த அப்துல்கலாம் வரிசையில், சூர்யாவின் போட்டோவும் போஸ்டர்களில் நிறைந்திருக்கிறது. பாஜகவுக்கு மாற்றாக சூர்யாவை உச்சத்தில் வைத்து பார்க்க துவங்கி உள்ளனர் ரசிகர்கள். இணையதளங்களில், சூர்யா விரைவில் காங்கிரசில் இணைவார் என்ற கிசுகிசுக்களும் ரவுண்டு கட்டி வருகின்றன.

    அரசியல்

    அரசியல்

    சூர்யாவை நாம் இத்தனை காலம் பார்த்து வந்தாலும், இந்த முறை பிறந்த நாளில் ஒரு ஸ்பெஷல் தெரிந்தது. "அரசியலுக்கு வா தலைவா" என்று ஓபனாகவே அழைத்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
    எப்படி பார்த்தாலும் சூர்யாவின் அரசியல் வருகைக்கு ஒரு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது போன்றே ஒரு பிரமை எற்பட்டள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+