நள்ளிரவில் பகீர்.. போதை பொருள் ரெய்டில் கைதான பொத்தேரி தனியார் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
சென்னை: பொத்தேரி தனியார் கல்வி நிறுவனத்தில் நடந்த கஞ்சா சோதனையில் 18 மாணவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே அவர்களில் ஒரு மாணவர் மீது போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த மாணவர் இப்போது ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் படித்து வருகிறார்கள்.

தனியார் கல்லூரி: அவர்களில் பெரும்பாலானோர் பொத்தேரி, கூடுவாஞ்சேரி பகுதிகளில் தான் தங்கி வருகிறார்கள். கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கல்லூரி விடுதிகளில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. சுமார் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பொத்தேரி பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர்.
காலை நேரத்தில் நடத்தப்பட்ட இந்த ரெய்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ரெய்டில் அரை கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், ஹூக்கா பவுடர் 6 கிலோ எனப் பல போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் குறித்து மாணவர்கள் சிலரை போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்த விவகாரத்தில் மொத்தம் 18 மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தது.
கல்லூரி மாணவர்: அவர்களில் 7 மாணவர்கள் போலீஸ் ஜாமீனிலும் 11 மாணவர்கள் நீதிமன்ற பிணையிலும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே அந்த கல்லூரியில் படித்த நான்காம் வகுப்பு பிடெக் மாணவர் விடுதியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் கல்லூரியில் நடந்த ரெய்டில் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற மாணவர்களில் இந்த மாணவரும் ஒருவர் ஆவார். விசாரணைக்குப் பிறகு அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதால் இது தொடர்பாகப் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகப் பெற்றோரைக் கல்லூரிக்கு அழைத்து வருமாறு மாணவரிடம் கூறியுள்ளது. இருப்பினும், பெற்றோருக்கு இது தெரிந்தால் கோபப்படுவார்கள் என்று அந்த மாணவர் அஞ்சியுள்ளார். இதனால் பெற்றோரைக் கல்லூரிக்கு அழைத்து வராமலேயே இருந்துள்ளார்.
தற்கொலை முயற்சி: இருப்பினும், கல்லூரி நிர்வாகம் பெற்றோரை நிச்சயம் அழைத்து வர வேண்டும் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அந்த மாணவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் செவ்வாய்க்கிழமை இரவு அந்த மாணவர் தான் இருந்த விடுதியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த மாணவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். நான்காவது மாடியில் இருந்து குதித்தில் அந்த மாணவர் படுகாயமடைந்துள்ளார். இதைக் கண்ட அருகே இருந்த மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இப்போது அந்த மாணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் அந்த கல்லூரி வளாகத்தில் மீண்டும் பரபர சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications