சென்னையில் அடையாறு, கோட்டூர்புரம், பல்லாவரம், தாம்பத்தில் நாளை பவர் கட்.. முழு விவரம்
சென்னை: சென்னையில் தாம்பரம், பல்லாவரம், அடையாறு, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற உள்ள இடங்களின் விவரங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அடையாறு, கோட்டூரபுரம், சிட்லப்பாக்கம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மாதம் ஒரு முறை எல்லா ஊரிலும் பழுதான மின்வயர்களை மாற்றுவது, பழுதான அல்லது சேதமடைந்த மின் மாற்றிகளை மாற்றுவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொள்வார்கள் . டிரான்ஸ்பார்மர்களில் மற்றும் மின் வழித்தடங்களிலும் துண மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகளை மின் ஊழியர்கள் மேற்கொள்வது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.இது பற்றி முதல் நாளே மின்வாரியம் அறிவித்துவிடும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படும் மின்சார தடை குறித்து https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml இணையதளத்தில் தினமும் வெளியிடப்படும் . அதில் உங்கள் ஊரில் நாளை மறுநாள், நாளை மின் தடை உள்ளதா என்பதை அறியலாம். நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையல், சென்னையில் 25.06.2025 அன்று (நாளை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்பட இருக்கிறது.
தாம்பரம்
சிட்லபாக்கம் ஆத்தி நகர், ஆனந்த புரம், வினோபா நகர், பேராசிரியர் காலனி, சிட்லபாக்கம் 1வது பிரதான சாலையின் ஒரு பகுதி, ராமச்சந்திரா சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, அய்யா சாமி தெரு.
அடையாறு
மல்லிப்பூ நகர், 1 முதல் 3வது பிரதான சாலை காந்தி நகர் பகுதி.
கோட்டூர்புரம்
ஸ்ரீ நகர் காலனி, தெற்கு, மேற்கு, மற்றும் வடக்கு மாட தெரு, தெற்கு அவென்யூ, கோயில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1 முதல் 6வது தெரு வரை.
பல்லாவரம்
சாவடி தெரு, ஐஎச்எஃப்டி காலனி, ஜிஎஸ்டி சாலை முதல் பல்லாவரம் பேருந்து நிலையம் வரை, சைதன்யா பள்ளி, அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, ரங்கநாதன் தெரு, கடப்பேரி துர்கா நகர் வீட்டு வசதி வாரியம், வினோபா நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, தாகூர் தெரு, வள்ளலார் தெரு, கம்பன் தெரு, காமராஜர் தெரு, காந்தி தெரு, காமட்சி தெரு, கட்டபொம்மன் நகர், கோகுல் தெரு, திருமுருகன் நகர், வசந்தம் நகர், பங்காரு நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, ஆர்.கே.வி.அவென்யூ, அருள் முருகன் நகர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications