ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொல்லியும்.. விஜய்யுடன் சேராத கட்சிகள்! காரணத்தை விளக்கிய திருமாவளவன்
சென்னை: என்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்று சொல்லி பார்த்தும்.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. இதற்கான காரணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் ஆட்சியை அமைப்போம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியின் நிலை
திமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையை, மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்பது பிரதமரின் முயற்சி. இது வெற்றியடையாது. தமிழக மக்களின் ஆதரவு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உள்ளது. இதை அவர்கள் எடுத்த சர்வேயில் வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. எனவே, வாய்க்கு வந்தபடி பேசி, திமுக குறித்தும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்தும், அவதூறு பரப்புகிறார்கள். இது மக்களிடையே எடுபடாது.
இன்றைக்கு திமுகவை எடப்பாடி பழனிசாமி இவ்வளவு எதிர்ப்பதற்கு காரணம், திமுக எதிர்ப்புதான் அதிமுகவின் உயிர்நாடி. எனவே திமுகவை அவர்கள் பாராட்ட மாட்டார்கள். எதிர்த்துதான் பேசுவார்கள். எனவே, அது பொருட்படுத்தக்கூடிய ஒன்று கிடையாது.
விஜய்க்கு நெருக்கடி
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகளை பொறுத்தவரை, என்டிஏ கூட்டணிக்கு வராத கட்சிகளை பாஜக, பல்வேறு யுக்திகளை கையாண்டு மிரட்டி வருகிறது. அப்படி தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய்க்கும் மறைமுகமான அழுத்தத்தையும், அச்சுறுத்தலையும் தருகிறார்கள் என்று, பலரும் யூகித்து சொல்லக்கூடிய செய்தியாகத்தான் இருக்கிறது. அதில் நானும் ஒருவன். விஜய்க்கு பாஜக நெருக்கடியை தருகிறத என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
என்டிஏவில் விஜய்
இந்த நெருக்கடிக்கெல்லாம் ஆளாகி, அவர் என்டிஏ கூட்டணிக்கு சென்றார் எனில், அவரது அரசியல் எதிர்க்காலம் கேள்விக்குறியாகிவிடும். விஜய்யை மட்டுமல்லாது.. அவருக்கு வியூகங்களை வகுத்து தரும் குறிப்பிட்ட சில நபர்களையும், பாஜக விசாரணை என்கிற பெயரில் அச்சுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படியாக விஜய்யை என்டிஏவில் இணைக்க முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.
பொய்யான பிம்பம்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொல்லியும்.. விஜய்யுடன் கூட்டணிக்கு அரசியல் கட்சிகள் வரவில்லை எனில்.. அரசியல் களத்தில் அவரது நிலை என்னவாக இருக்கிறது? என்பதை அவர் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவரை சுற்றியிருப்பவர் அவருக்கு ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். யாருடைய தயவு இல்லாமல்.. எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் ஆட்சியை கைப்பற்றிவிடுவோம் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications