திடீரென இருண்ட மேடை.. ஆதவ் அர்ஜுனா உட்பட 5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மின்தடை!
சென்னை: மதுராந்தகத்தில் இன்று மாலை நடைபெற்ற தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உட்பட 5 அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பவர்ட் கட் பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அதிருப்பதியடைந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது.

அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலும் பவர்கட்
மதுராந்தகம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் காரணமாக அமைச்சர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை மதுராந்தகத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், ராஜ்மோகன் என 5 அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். ஆதவ் அர்ஜுனா வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியலை கொடுத்து, சால்வை அணிவித்து கௌரவித்துக்கொண்டிருந்த நேரத்தில் சட்டென பவர் கட் ஆனது.
பவர் கட் ஆன அடுத்த 2-3 நிமிடங்களில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திருமண மண்டப நிர்வாகத்திடம் கேட்டபோது, ஓவர் லோடு ஆகியிருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மின்சாரத்துறை சார்பில் கூறுகையில்.. தங்கள் தரப்பிலிருந்து மின்சாரம் எதுவும் துண்டிக்கப்படவில்லை என்று தெரிவித்தாக சொல்லப்படுகிறது.
எது எப்படி இருப்பினும் அமைச்சர்கள் பங்கேற்க கூட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அமைச்சர்களால் கூட மின்வெட்டை தடுக்க முடியாதோ? என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு
தவெக ஆட்சிப்பொறுப்பேற்றபோது மின்வெட்டுக்கான காரணங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டிருந்தது. நாங்கள் பணியாளர்களை தேர்வு செய்வோம் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது வரை போதிய பணியாளர்கள் எடுக்கப்படவில்லை என்று மின்சார வாரிய ஊழியர்கள் புலம்புகின்றனர். 40 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 4 பேர் மட்டுமே வேலை செய்வதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
போதுமான அளவுக்கு மின்சார கொள்முதல், மின் உற்பத்தி இல்லாதது அடிக்கடி கரண்ட் கட்டாக காரணமாக இருந்தாலும், பழுதடைந்த மின் இணைப்பை உரிய நேரத்தில் சரி செய்வது, பழுதாகமல் பராமரிப்பது போன்ற பணிகளை செய்ய ஆள் இல்லாததால்தான் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு மழைக்காலங்களுக்கு முன்னதாக மின்சார வயர்களை உரசி செல்லும் மரக்கிளைகளை வெட்ட வேண்டும். அதேபோல பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்கெல்லாம் போதுமான ஆள் இல்லாததால்தான் மின் வெட்டை உடனடியாக சரி செய்ய முடியவில்லை என்று கூறுகின்றனர். அரசு இதை எப்படி சரி செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
