மின்வாரியம் தந்த முக்கிய மெசேஜ்.. சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மின்தடை.. இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தமிழகத்தில் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டேன்ஜெட்கோ) சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக டேன்ஜெட்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛சென்னையில் 15.07.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், போரூர், பெசன்ட் நகர், ஆவடி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பல்லாவரம்: பெரியார் நகர், பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, பாஸ்கர் தெரு, அருள் பாண்டியன் தெரு, ராஜிவ் காந்தி நகர், தில்லி தெரு, பெரியார் நகர், ஸ்ரீநிவாச காலனி, எம்ஜிஆர் காலனி, பிபி அம்மாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
பெசன்ட் நகர்: சாஸ்திரி நகர், காமராஜ் சாலை, வால்மீகி தெரு, கலாசேத்ரா ரோடு, லட்சுமிபுரம், ஸ்ரீராம் நகர், குமரகுரு 1வது தெரு முதல் 4வது தெரு வரை, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
போரூர்: கோவூர், கொழுமணிவாக்கம், மேல்மா நகர், தண்டலம், இரண்டாம் கட்டளை, சதனந்தபுரம், கரிமாநகர், மணிகண்டா நகர், மெட்ரோ ஹைடெக், ஸ்டார் சிட்டி உள்ளிட்ட இடங்களில் இன்று மின் விநியோகம் என்பது இருக்காது.
ஆவடி: திருமுல்லைவாயல், குளக்கரை, திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணிஸ்வரர் நகர், எட்டியம்மன் நகர், வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி, பள்ளி விநாயகர் கோவில் தெரு, கோவில் பாதகை, பூம்பொழில் நகர், திருமலைவாசன் நகர், அசோக் நகர், பைபில் காலேஜ், செயிண்ட் பீட்டர்ஸ் நகர், கிரிஸ்ட் நகர், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர், தென்றல் நகர், ஜாக் நகர், முல்லை நகர், தென்றல் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, பத்மாவதி நகர், அம்பேத்கர் நகர், திருமுல்லைவாயல் காலனி, மூர்த்தி நகர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications