பவர் ஸ்டார் சீனிவாசன் கதியை பார்த்தீங்களா.. சொந்த குடும்பமே கடத்தி.. வனிதா விஜயகுமாரிடம் குமுறல்
பணத்துக்காக தனது சொந்த குடும்பமே தன்னை கடத்திய கொடுமை நடந்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சொத்துக்காக தனது சொந்த குடும்பமே தன்னை கடத்திய கொடுமை நடந்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு லத்திகா எனும் படத்தை இயக்கி தயாரித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அந்த படத்தில் இவர் ஹீரோவாகவே அறிமுகானார். ஹீரோவாக திரையில் தோன்றினாலும் அவரை காமெடியனாகவே மக்கள் ஏற்றனர்.
சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம், பவர்ஸ்டாரை கலாய்க்கும் விதத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதன் மூலம்தான் பவர்ஸ்டார் பேமஸ் ஆனார் என சொல்லலாம்.

ஷங்கர் படம்
இதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் ஐ படத்திலும் பவர் ஸ்டார் நடித்திருந்தார். பின்னர் பிக்கப் ட்ராப் படத்தில் வனிதா விஜயகுமாருடன் நடித்திருந்தார். இந்த படத்தின் போது திடீரென வனிதாவும் பவர் ஸ்டாரும் திருமணம் செய்து கொண்டது போல் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பீட்டர் பாலை விரட்டியடித்துவிட்டு வனிதா பவரை திருமணம் செய்து கொண்டார் என்றே பேசப்பட்டன.

திருமண கோலம்
ஆனால் அந்த திருமண காட்சி பிக்கப் டிராப் படத்தில் வரும் ஒரு காட்சி என தெரியவந்தது. எனவே படத்தின் பிரமோஷனுக்காக வனிதா தனது ட்விட்டரில் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் பவர்ஸ்டாருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

யூடியூப் சேனல்
தற்போது உடல்நலம் தேறியுள்ள அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் வனிதா விஜயகுமார் கேள்வி கேட்க பவர்ஸ்டார் பதில் அளித்துள்ளார். நான் மதுரையில் பிரபலமான அக்குபஞ்சர் மருத்துவராக பணியாற்றினேன். அப்போதுதான் நாம் பிரபலமடைய வேண்டும் என விரும்பினேன். அதற்கு சினிமாதான் பெஸ்ட் என நினைத்தேன்.

லத்திகா
இதற்காக சென்னை வந்த பிறகு ஒரு படத்திற்கு பைனான்ஸ் செய்தேன். அப்போது நாமே ஒரு படத்தை எடுத்து அதற்கு பைனான்ஸ் செய்து நடித்தால் என்ன என யோசனைக்கு பிறகு லத்திகா படத்தில் நடித்தேன். இந்த படத்தை திரையரங்கு ஒன்றில் 360 நாட்களுக்கு ஓட வைக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்தேன். இதன் பிறகுதான் கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வாய்ப்பு கிடைத்தது.

சொத்துக்காக கடத்தல்
பணம் இருந்த போது என்னுடன் சுற்றிய சில பேர் என்னிடம் பணம் இல்லாததால் என்னை விட்டு விலகினர். ஒரு நாள் படம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு என்னை வரசொன்னார்கள். அப்போது என்னை ஒரு மர்ம கும்பல் கடத்திச் சென்றது. பின்னர் விசாரணையில் என் சொந்த குடும்பமே சொத்துக்காக என்னை கடத்தியது தெரியவந்தது என உருக்கமாக தெரிவித்தார்.

செக் மோசடி
கடந்த 2016 ஆம் ஆண்டு செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பவர்ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து துறையூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் வரதராஜன். ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார். இதற்கு ரூ.60 லட்சம் கமிஷன் பேசி, ரூ.30 லட்சத்தை 6 மாதங்களுக்கு முன் வரதராஜன் கொடுத்திருந்தார். ஆனால் சொன்னபடி கடன் வாங்கித் தரவில்லை.

திகாரில் பவர்ஸ்டார்
வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதே வழக்கில் ஏற்கெனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவர் ஸ்டார் வெளியே வந்து சில படங்களில் நடித்தார். இதையடுத்து செக் மோசடி வழக்கை வரதாஜன் மீண்டும் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications