சென்னையில் இன்று மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக புது வண்ணாரப்பேட்டை மற்றும் சோத்துப்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளிலும் மின்வாரியம் சார்பில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 27.11.2024 அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
புதுவண்ணாரப்பேட்டை: வடக்கு டெர்மினில் சாலை, டிஎச் ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மைய்யா மேஸ்திரி தெரு, புச்சம்மாள்தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, எருசப்பா மேஸ்திரி தெரு,பூண்டி தங்கம்மாள் தெரு, ஏஇ கோவில் தெரு, அவூர் முத்தையா தெரு, ஒத்தவாடை தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டு தெரு, கிரமத்தெரு, குறுக்கு சாலை, சிவன்நகர், மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்பிடி குவார்ட்டர்ஸ், ஏஇ கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சோத்துப்பாக்கம்: பாலாஜி கார்டன், பைபாஸ் ரோடு, ஆன் உல்லாசசிட்டி, சாந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications