பிபிஎஃப் கணக்கு.. வங்கியில் சேமிப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த நிர்மலா சீதாராமன்
சென்னை: வங்கிகளில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கு வைத்துள்ள ( PPF Nominee Update) சந்தாதாரர்களுக்கு ஒரு பெரிய நல்ல விஷயத்தை மத்திய அரசு செய்துள்ளது. நாமினி விவரங்களைப் புதுப்பிப்பது அல்லது மாற்றுவதற்கான கட்டணங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இதுபோன்ற மாற்றங்களுக்கு நிதி நிறுவனங்கள் ரூ.50 கட்டணம் விதிப்பதை கவனித்ததாக கூறிய அவர், PPF கணக்குகளில் நாமினி விவரங்களைப் புதுப்பிப்பது இப்போது இலவசம் என்றும் முற்றிலும் எளிதாகிவிட்டது என்றும் கூறினார்.
PPF என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கு என்பது மத்திய அரசு பொதுமக்களுக்கு வழங்கும் சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டம் ஏழை எளிய மக்கள் நீண்ட காலத்தை முதுலீடு செய்து பணத்தை பெருக்கவும், வரி இல்லாத மற்றும் உறுதியான வருமானத்தைப் பெறவும் பயனுள்ளதாக இருக்கிறது. பொது வருங்கால வைப்பு நிதியில் சேமிப்பவர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் PPF இல் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகைகளைப் பெற்றிட முடியும். சுருக்கமாக சொல்வதென்றால் PPF என்பது சிறு சேமிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வங்கித் திருத்த மசோதா 2025 இன் கீழ் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, PPF வைப்புத்தொகையாளர்கள் தங்கள் நிதியை நான்கு நாமினிகளுக்கு பகிர்ந்தளிக்க பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதே போல் வங்கிகளில் பாதுகாப்பு லாக்கர்களில் சேமிக்கப்பட்ட பொருட்களையும் நாமினிகள் பின்னாளில் பயன்படுத்த பரிந்துரைக்கிறது புதிய சட்டம்.
நாமினி விவரங்களைப் புதுப்பிப்பது அல்லது மாற்றுவதற்கான கட்டணங்களை மத்திய அரசு நீக்கியுள்ளநிலையில்,PPF கணக்கில் நாமினிதாரர்கள் (வாரிசுகள்) விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது? என்பதை இந்த பதிவில் தற்போது பார்ப்போம்.
உங்கள் PPF கணக்கில் வாரிசு விவரங்களை மாற்ற, நீங்கள் படிவம்-10 ஐ தாக்கல் செய்ய வேண்டும். இதை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எளிதாக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
SBI, HDFC மற்றும் ICICI போன்ற சில வங்கிகள் சந்தாதாரர்கள் இணைய வங்கி மூலம் நாமினி விவரங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கின்றன.
ஆன்லைன் முறை எப்படி:
உங்கள் வங்கியின் இண்டர்நெட் பேங்கிங் போர்ட்டலில் உள்நுழையவும்.
அங்கு PPF கணக்குப் பிரிவுக்குச் செல்லவும்.
"நாமினி அப்டேட்" அல்லது "நாமினேஷன் மாற்றலாம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
புதிய வாரிசு விவரங்களை உள்ளிடவும் (பெயர், உறவு, சதவீத பங்கு, போன்ற விவரங்களை பதிவிடலாம்).
தொடர்ந்து OTP கேட்கும் அதனை கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து கோரிக்கையைச் சமர்ப்பித்து ஒப்புதலுக்கு சேவ் செய்யலாம்.. நாமினி அப்டேட் அத்துடன் முடிந்துவிடும்.
உங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகம் ஆன்லைனில் மாற்ற முடியவில்லை என்றால், ஆஃப்லைன் செயல்முறையில் செய்யலாம்.
உங்கள் வங்கி/தபால் அலுவலகத்திலிருந்து படிவம் F ( நாமினிப் படிவம்) பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது வங்கி தபால் அலுவலகத்தில் வாங்கி கொள்ளலாம்.
பின்னர் நாமினி விவரங்களை நிரப்பவும் (பெயர், முகவரி, உறவுமுறை மற்றும் பல நாமினிகள் இருந்தால் சதவீதப் பங்கு விவரங்களை குறிப்பிட வேண்டும்).
அந்த நாமினி விண்ணப்பத்துடன் உங்கள் அடையாளச் சான்றின் நகலை (ஆதார், பான் போன்றவை) இணைக்க வேண்டும்.
தொடர்ந்து நீங்கள் PPF கணக்கு வைத்திருக்கும் உங்கள் வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்தில் நிரப்பப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிக்கவும். அவர்கள் நாமினி விவரங்களை அப்டேட் செய்துவிடுவார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications