துவாரகா பேசியதன் பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்.. பழ நெடுமாறன் பரபரப்பு பேட்டி
சென்னை: பிரபாகரன் மற்றும் அவரது குடும்பமே அழிந்து போய்விட்டது என்று எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வந்தது. இப்போது பிரபாகரனின் புதல்வி வந்து உலக மக்களிடையே பகிரங்கமாக பேசியுள்ளார் என்று பழ நெடுமாறன் கூறினார்.
தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடந்தது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபாகரனின் மகள் துவாரகா என்ற பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வீடியோவில் பேசிய பெண் தமிழீழத்திற்காக அரசியல் வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

ஆபத்து, நெருக்கடி, சவால்களை கடந்து நான் உங்கள் முன் தோன்றியுள்ளேன். தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தனித்து நின்று போர் புரிய திராணியற்ற அரசு சிங்கள அரசு. தற்போது பண்பாட்டு சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தின் ஆட்சி இல்லை. ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்று சொன்னார்கள் ஆனால் கிடைக்கவில்லை. ஈழத்தமிழர்களுக்கு ஐநாவும் நீதி வழங்கவில்லை.
இதுதான் எமது சுதந்திர போராட்டம் உயிர்ப்புடன் இருக்க காரணம்" என்று பேசியிருந்தார். இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும், பிரபாகரன் மகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் அடிபடும்.
இந்த நிலையில், தான் துவராகா என்ற பெயரில் பெண் ஒருவரின் வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது ஏஐ வீடியோவாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. வீடியோவின் உண்மைத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், துவாராகா பேசுவதாக கூறி வெளியிடப்பட்ட வீடியோவிற்கு பிறகு பழ. நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரபாகரன் மற்றும் அவரது குடும்பமே அழிந்து போய்விட்டது என்று எல்லா பத்திரிகைகளிலும் செய்தி வந்தது. இப்போது பிரபாகரனின் புதல்வி வந்து உலக மக்களிடையே பகிரங்கமாக பேசியுள்ளார். அதன் பொருள் என்ன. அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications