விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
சென்னை: எல்நினோ ஆண்டின் தாக்கம் தொடர்வதால் கோடை வெயில் தாக்கமானது அதிகமாகவே இருக்கும் என்று ப்ரதீப் ஜான் கூறியுள்ளார்.
1998இல் இருந்து 2017 வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 66 ஆயிரம் மக்கள் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இறந்து இருக்கிறார்கள் என்று அரசாங்க அறிக்கை சொல்கிறது.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் கோடை வெயிலின் தாக்குதலுக்கு உயிரையேப் பறிகொடுக்க வேண்டிய கொடுமையான சம்பவம் அரங்கேறி இருந்தது..
ஆகவே, வெயில்தானே என்று யாரும் அலட்சியம் காட்டக் கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது.
புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தக் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூட எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் வெயில் நிலவி வருகிறது. சென்னை மக்கள் பலரும் மழை வராதா என்று காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்க என்ன காரணம்? அது பற்றிய முழு விளக்கத்தை கொடுத்துள்ளார் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்.

வெயிலின் தாக்கம் பற்றி அவர், "பொதுவாக எல்நினோ ஆண்டுகளில் சராசரி ஆண்டுகளைவிட அதிக வெப்பநிலை இருக்கும். ஒரு எல்நினோ ஆண்டு முடிந்து அடுத்ததாக வரும் ஆண்டில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும்.
உதாரணமாக 1999இல் அதிக உயிரிழப்புகள் இருந்தன. ஏனென்றால் 1997 என்பது எல்நினோ ஆண்டு. அதன் பின்னர் வந்த ஆண்டுகளில் அதன் தாக்கம் இருந்ததை நாம் முன்பே பார்த்துள்ளோம்.
அதைப்போன்று தான் கடந்த ஆண்டு நாம் அதிக வெப்ப அலைகளின் தாக்கத்தை அனுபவித்தோம். கடந்த ஜூன் மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை வந்தது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
இந்த வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணம், மழை இல்லாதது. பொதுவாக மார்ச் மாதம் நமக்கு கோடை மழை பெய்யும். கட்டாயம் மாத இறுதியில் ஒரு மழையை சென்னைச் சந்திக்கும்.

ஆனால், இந்தமுறை மழை இல்லை. சில மாவட்டங்களில் லேசாக மழை இருந்தது. பரவலாக மழை என்பது இந்த ஆண்டு குறைந்தே காணப்படுகிறது.
ஒரு பக்கம் கோடை மழை வராதது. அதன்பின்னர் எல்நினோ ஆண்டு. இந்த இரண்டும் சேர்ந்து வெப்பநிலையை அதிகரிக்க செய்துள்ளது.
அப்படிப் பார்த்தால் மே 4 முதல் 28 வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏன் அதிகமாக இருக்கும் என்றால், காற்றின் திசை மேற்கிலிருந்து வீசும்.
தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது மேற்குத் திசையிலிருந்து வரும் காற்று தரைக்காற்றாக மாறிவிடும்.

அப்படி என்றால் ஆந்திரா பகுதிகளில் உள்ள ராயலசீமா, கடப்பா போன்ற இடங்களிலிருந்து வெப்பக்காற்று நம் சென்னையை நோக்கி வரத் தொடங்கிவிடும். அங்கிருந்து வரும் வறண்டக் காற்று காரணமாக சென்னையில் வெப்பநிலை அதிகரித்துவிடும். அதைத்தான் கத்திரி வெயில் என்று மக்கள் சொல்வார்கள்.
கோடை மழையைப் பொறுத்த அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் கோடை மழையை எதிர்பார்க்கலாம். தென்காசி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையில் மழைக்கான வாய்ப்பு இல்லை. கடலில் உருவாகும் காற்றழுத்த பகுதியால்தான் மழை வரும். அதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை
இந்த முறை மேகக் கூட்டங்கள் நன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆகவே ஜூன் மாதம் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்" என்கிறார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications