சென்னையில் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத மழை.. இன்றும் பெய்யுமா?.. வெதர்மேன் பதில் இதோ!
சென்னை: சென்னையில் ஓரிரு மணி நேரங்கள் தூரல் போட்டுவிட்டு பின்னர் மழை நின்றுவிடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வதைத்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
நேற்று மாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கூடிய மழை சென்னையில் கொட்டியது.

நொளம்பூர்
தி நகர், கிண்டி, சைதாப்பேட்டை, முகப்பேர், நொளம்பூர், அம்பத்தூர், பூந்தமல்லி, அமைந்தகரை, கோயம்பேடு, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியை இந்த மழை ஏற்படுத்தியது.

பிரதீப் ஜான்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சென்னையில் இரவு நேரம் மழை பெய்தது. மேகக் கூட்டங்கள் கடலை நோக்கி நகர்ந்துவிட்டன. எனவே அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு சாரல் மழை பெய்துவிட்டு பின்னர் மழை நின்றுவிடும்.

வெயில்
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 50 மி.மீ. மழையும், செம்பரம்பாக்கம், மேற்கு தாம்பரத்தில் தலா 32 மி.மீ., வில்லிவாக்கத்தில் 25 செ.மீ., தரமணியில் 24 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் நந்தனத்தில் 15 மி.மீ., மாதவரம், சென்ட்ரலில் தலா 12 மி.மீ. மழை பெய்துள்ளது.

குறைந்தபட்ச மழை
வள்ளுவர் கோட்டத்தில் 19 மி.மீ., முகலிவாக்கத்தில் 14 மி.மீ., 12 ஆவது பிரதான சாலை அண்ணா நகரில் 13 மி.மீ. அம்பத்தூர், சோழிங்கநல்லூர், கத்திவாக்கத்தில் தலா 12 மி.மீ. மழையும் ராயபுரம், வளசரவாக்கம், திருவிக நகர், அண்ணா நகர் மேற்கு ஆகிய பகுதிகளில் தலா 10 மி.மீ மழையும் பெய்துள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications