பென்ஷன் ரூ.3000 தரும் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் திட்டம்.. மத்திய அரசின் சூப்பர் சான்ஸ்.. செம
சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் (Pradhan Mantri Shram-Yogi Maandhan) திட்டம் கீழ் மாதம் 3,000 பென்ஷன் அளிக்கப்படும் என்று கடந்த 2019-ல் பியூஷ் கோயல் அறிவித்திருந்தார்.. பிரதான் மந்திரியின் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படும் இந்த திட்டத்தில், இதுவரை இந்தியா முழுவதும் 46,29,664 க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.. இத்தனை பேரின் ஆதரவை இந்த திட்டம் பெற என்ன காரணம் தெரியுமா? இந்த திட்டத்தில் எப்படி இணைவது? யார் யாரெல்லாம் இணையலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பென்ஷன் என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில், அதனை மாற்றியமைத்து, சாமானிய மக்களுக்கும் கிடைக்கும்படியான திட்டங்களை மததிய அரசு செயல்படுத்தி உள்ளது.. இதற்காகவே அடல் பென்சன் யோஜனா போன்ற நிறைய திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன..

அமைப்பு சாரா தொழிலாளர்கள்
இதில், அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பென்சன் திட்டம் மிக முக்கியமானதாகும்.. எதிர்காலம் குறித்த கவலையில் மூழ்கியிருப்போருக்கு, நம்பிக்கையும், பணப்பலனையும், நிதிப்பாதுகாப்பையும் தரக்கூடியவை இதுபோன்ற பென்ஷன் திட்டங்கள்தான்.அந்தவகையில் பெரும்பாலானோரின் நேரடி பலனையும், ஆதரவையும் பெற்ற திட்டம்தான், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டமாகும்.. அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவே கொண்டு வரப்பட்ட இந்த திட்டமானது, கடந்த 2019ல் கொண்டுவரப்பட்டது.
மாதம் ரூ.200 போதும்
இந்த திட்டத்தில் தனிநபர்கள், மாதம் வெறும் ரூ.55 செலுத்தி வந்தாலே, வயதான காலத்தில் ரூ.3 ஆயிரம் பென்ஷனை பெறலாம்... பயனாளிகள் ரூ.200 மாதம் செலுத்தினால் அரசும் பென்ஷன் ஃபண்டில் ரூ.200 செலுத்தும்... மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது 30 லட்சம் ரூபாய் வரையிலான கிராஜூவிட்டி தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறைவான வருவாய் ஈட்டுபவர்களுக்கு இந்த பென்ஷன் தொகையானது, மிகுந்த உதவியாய் இருந்து வருகிறது.. எனவே, அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள யாராக இருந்தாலும் இந்த ஷரம் யோகி மந்தன் திட்டத்தில் இணைய முடியும்.
ஷரம் யோகி மந்தன் திட்டம் பென்ஷன்
மாதம் ரூ. 15,000-க்கும் குறைவாகச் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் திட்டம் கீழ் ஓய்வூதியம் பெற முடியும்.இந்த திட்டத்தில் இணைய 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.. 15 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கினால் இந்த திட்டத்தில் இணைய முடியாது.. அதேபோல, வருமான வரி செலுத்துபவர்கள் அல்லது EPFO, NPS அல்லது ESIC உறுப்பினர்களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் இணைய தகுதியற்றவர்கள் ஆவர்.
18 வயதில் ஷரம் யோகி மந்தன் திட்டத்தில் இணைந்தால், மாதம் ரூ.55 செலுத்தினால் , ஓய்வு காலத்தில் ரூ.3000 கிடைக்கும். 29 வயதில் இணைந்தால் மாதாந்திர பங்களிப்பு தொகையாக ரூ.80 செலுத்த வேண்டும். 40 வயது நிரம்பியவருக்கு, மாதாந்திர பங்களிப்பு 200 ரூபாயாக மாறும். எந்த அளவு பங்களிப்பு அளிக்கிறோமோ அதற்கு ஏற்றப்படி பென்ஷன் தொகை மாறுபடும். அதாவது, ரூ.55 முதல் ரூ.200 வரை மாறுபடும். இதே தொகைக்கு ஏற்றார்போல அரசும் பங்களிக்கிறது.
யாரெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்?
விவசாயத் தொழிலாளர், மீனவர், கட்டுமானத் தொழிலாளர், ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர், பனைமரத் தொழிலாளர், காலணித் தொழிலாளர், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், ஓவியர், கைத்தறி நெசவு தொழிலாளர்கள், தூய்மைப் பணிபுரிவோர், உலாமாக்கள் மற்றும் பணியாளர்கள், கிராமக் கோவில் பூசாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், கட்டிட தொழிலாளர்கள், புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர், அச்சக தொழிலாளர், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், சிறு வியாபாரிகள், வீட்டுப் பணியாளர், பொற்கொல்லர், திரைத் தொழிலாளர் ஆகியோர் பலன் பெறுவர்
தேவையான ஆவணங்கள்
முதல் மாதம் மட்டும் நீங்கள் ரொக்கமாக செலுத்தினால் போதும், அதற்கு பிறகு, உங்கள் வங்கிக்கணக்கலிருந்து டெபிட் செய்யப்பட்டுவிடும். இந்த திட்டத்தில் இணைய, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஜன் தன் வங்கி கணக்கு போன்றவை அவசியமாகும்..
ஷரம் யோகி மந்தன் திட்டத்தில், பயனாளிகள் 60 வயதை எட்டும்போது எதிர்பாராமல் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியத் தொகையில் 50% குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும்.. ஒருவேளை, பயனாளி, 60 வயதுக்கு முன்பாக இறந்துவிட்டால் மனைவி அல்லது கணவன் இத்திட்டத்தை தொடரலாம். அல்லது தொடர விருப்பமில்லையானால், பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications