சென்னை வந்தார் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா.. உற்சாக வரவேற்பு.. முதல்வர் ஸ்டாலின் தரும் பரிசு
சென்னை: உலகக்கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பரிசு வென்று திரும்பியுள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் பிரக்ஞானந்தாவிற்கு ரூ.30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர். இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று போட்டிகளும் டிரா ஆன நிலையில், டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பரிசு பெற்றார்.

18 வயதிலேயே தன்னுடைய பெயரை வரலாற்றில் மிக தீர்க்கமாக பதித்துள்ளார் பிரக்ஞானந்தா. மிகவும் இளம் வயதில் செஸ் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, பாபி ஃபிஷர் மற்றும் கார்ல்ஸனுக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தேர்வுபெற்ற மூன்றாவது இளம் வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்துள்ளார். 20 ஆண்டுகள் கழித்து செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் அவர் பெற்று உள்ளார்.
பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார். செஸ் உலகக்கோப்பை போட்டியில் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்க்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து மிளிருங்கள் என்று தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். பிரக்ஞானந்தாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்.
இதனிடையே உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பரிசுடன் தாய்நாடு திரும்பும் பிரக்ஞானந்தாவிற்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இன்றைய தினம் காலையில் சென்னை விமான நிலையம் வந்த பிரக்ஞானந்தாவிற்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமானோர் விமான நிலையத்திற்கு திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். மாலைகள் சூடியும் தலையில் கிரீடம் வைத்தும் வரவேற்பு அளித்தனர்.

இன்றைய தினம் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரக்ஞானந்தாவிற்கு தேநீர் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் பிரக்ஞானந்தா. இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பரிசுடன் சென்னை திரும்பியுள்ள பிரக்ஞானந்தாவிற்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications