சோறு போட அதென்ன ஹோட்டலா? கல்விக்கண் திறந்த காமராஜர்.. முதலமைச்சர் புகழாரம்! அரசு பள்ளிகளுக்கு ஹேப்பி
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. காமராஜரின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் இன்று, உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை கடலூரில் தொடங்க உள்ளார்.. மேலும், காமராஜருக்கு தன்னுடைய புகழ் வணக்கத்தையும் தெரிவித்து கொண்டுள்ளார்.. இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது.

ஸ்டாலின் புகழ் வணக்கம்
இதையொட்டி, அரசியல் தலைவர்கள், காமராஜரின் புகழ்போற்றி, அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.. இந்த நிலையில், காமராஜரின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தி உள்ளார்.. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, "பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?" என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!" என்று முதல்வர் பதிவிட்டு உள்ளார்
இதனிடையே, தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும். .அந்தவகையில், இன்றைய தினமும், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து நிதி வழங்கப்பட உள்ளது.
இந்த பள்ளிகள் மாணவர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்ததுடன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பாக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஊக்கம்
கலை, இலக்கியம், நாடகம் போன்ற துறைகளில் மாணவர்களை நன்கு ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி குழு ஆகியவை சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். புரவலர்களையும் அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் பெறும் நிதியை கொண்டு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறைகள், ஆய்வகம், நூலக மேம்பாடு, சுற்றுச்சுவர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதுதவிர, இந்த ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். காமராஜரின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தி,பரிசுகள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பானது, தமிழக பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தையும், புத்துணர்ச்சியையும் தந்து கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications