Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகராட்சி கமிஷனர் டூ வரலாற்று ஆவண காப்பகம்! பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.க்கு மீண்டும் டம்மி பதவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பால்வளத்துறை ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ். வரலாற்று ஆவண காப்பக ஆணையராக மீண்டும் டம்மி பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    37 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. Tamilnadu Government நடவடிக்கை *Politics

    கடந்த அதிமுக ஆட்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக கோலோச்சிய பிரகாஷ் ஐ.ஏ.எஸ்., அப்போதைய அமைச்சர் ஒருவருடன் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டார்.

    இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் கலை மற்றும் கலாச்சாரத்துறை ஆணையராக மாற்றப்பட்டு, மீண்டும் மூன்றே மாதங்களில் பசையுள்ள பதவியில் வந்து அமர்ந்தார் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு ஒரு 6 மாதங்கள் கூட நிலைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.

    பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.

    கொரோனா பரவல் சென்னையில் உச்சக்கட்டத்தில் இருந்த போது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். வீதி வீதியாக தகரம் வைத்து தடுப்பு அமைக்கும் பணிகள் தொடங்கி தெருக்களை தனிமைப்படுத்துதல் வரை எல்லாம் இவர் எடுக்கும் முடிவின் படித் தான் நடந்தது. காலை ஒரு பேட்டி மாலை ஒரு பேட்டி என சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது எப்போதுமே லைம் லைட்டில் இருந்தவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.

    பால்வளத்துறை ஆணையர்

    பால்வளத்துறை ஆணையர்

    அதிமுக ஆட்சியில் பவர்ஃபுல் அமைச்சராக இருந்த ஒருவருக்கு நெருக்கமான அதிகாரியாக அறியப்பட்ட இவரை, ஆட்சிக்கு வந்ததும் டம்மி பதவிக்கு தூக்கி அடித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். கலை மற்றும் கலாச்சாரத்துறை ஆணையராக மூன்று மாத காலம் பணியாற்றிய பிரகாஷ் ஐ.ஏ.எஸ்., மீண்டும் பசையுள்ள பதவியான பால்வளத்துறை ஆணையர் பதவியை கடந்த ஜனவரி மாதம் கைப்பற்றினார். திமுக ஆட்சியில் பிரகாஷுக்கு பால்வளத்துறை ஆணையர் பதவியா என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்திலேயே பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன.

    3 முறை டிரான்ஸ்ஃபர்

    3 முறை டிரான்ஸ்ஃபர்

    எந்த ரூட்டை பிடித்து பிரகாஷ் இப்படி அதிகாரமிக்க பதவிக்கு வந்தார் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பட்டிமன்றமே நடக்கத் தொடங்கியது. இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை, இருக்கும் இடம் தெரியாத வகையில், வரலாற்று ஆவண காப்பகம் ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ். பந்தாடப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு இப்போது 4-வது பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    4 கலெக்டர்கள்

    4 கலெக்டர்கள்

    இதேபோல் திருச்சி, தருமபுரி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களும் டம்மி பதவிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் பெரியளவில் நடக்கப்போகிறது என்ற தகவலை ஒன் இந்தியா தமிழ் தான் முன்கூட்டியே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+