ஆளுநரின் செயல் அருவருக்கத்தக்கது.. விஜய்க்குதான் மக்கள் ஆணை கிடைச்சது! பிரகாஷ்ராஜ் சப்போர்ட்
சென்னை: விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அருவருக்கத்தக்கது எனவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். விஜய்யை அரசியல் களத்தில் கடுமையாக விமர்சித்த பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்தே நொடிக்கு நொடி பரபரப்பாக நகர்ந்து வருகிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதே தவிர ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் எண் இல்லை.

திண்டாடும் தவெக
108 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் மொத்தம் 113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு உள்ளது. இன்னும் பெரும்பான்மைக்கு 6 எம்.எல்.ஏக்கள் தேவை. தேர்தல் முடிந்து 3 நாட்கள் ஆகியுள்ள போதிலும் இந்த எண்ணை பெற தவெக கடும் பாடுபடுகிறது.
விஜய்க்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு
இதற்கிடையே தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் விஜய் உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. இரன்டாவது முறையாக இன்றும் விஜய் ஆளுநரை சந்தித்துள்ளார். தனிப்பெரும் கட்சியாக தவெகவை ஆட்சி அமைப்பதே அரசியல் அமைப்பு படி ஆளுநரின் கடமை என்றும் அதை மீறும் எதேச்சதிகார செயல்பாடு எனவும் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ்ஜும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். பிரகாஷ் ராஜ் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- ஆளுநரின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது.
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்
அரசமைப்புக்கு எதிரானது. நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. சட்டமன்றத்தில் தனது உரிமையை நிலைநாட்ட விஜய்க்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தின் போது விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பிரகாஷ் ராஜ் முன்வைத்து இருந்தார். திமுகவிற்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பிரசாரம் செய்து வந்த நிலையில், தற்போது ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்து விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
-
"வாழ்க்கை என்பது ஆரம்பத்தில் கண்ட கனவை விட".. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சமந்தா பதிவு -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா?












Click it and Unblock the Notifications