நீங்கள் முதல்வரானால்.. டெல்லி வேலைகளை என்கிட்ட குடுத்துடுங்க.. ஸ்டாலினிடம் பதவி கேட்கும் பிகே!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை தனக்கு கொடுக்குமாறு கேட்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் இன்னும் 20 நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி தொடங்குவதற்கு முன்பே அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் தேர்தல் வியூகம் அமைத்து தர திமுக ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஐபேக் நிறுவனம்தான் திமுகவுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறது. பிரசாந்த் கிஷோர் வைத்த குறி இதுவரை தப்பியதில்லை என கூறப்படுகிறது. அவரும் திமுக இந்த முறை நிச்சயம் வெல்லும் என உறுதியளித்துள்ளாராம்.

சிறந்த ஆண்டு
இதை ஸ்டாலின் பிறந்தநாளன்றும் பிரசாந்த் கிஷோர் நிரூபித்தாராம். ஸ்டாலினை டேக் செய்து பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட ட்வீட்டில் பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே. உங்கள் தலைமையில் திமுக மகத்தான வெற்றியை பெற போகிறது. இந்த ஆண்டு உங்களுக்கும் தமிழக மக்களும் உண்மையில் சிறப்பான ஆண்டாகவே அமையும் என பிரசாந்த் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
இதை பார்த்ததும் திமுக வெற்றியை இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டார்களாம் உடன்பிறப்புகள். இந்த நிலையில் திமுக வெற்றி பெற்றதும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளாராம்.

முக்கிய பிரமுகர்கள்
இந்த பதவியானது தமிழக ஆளும் கட்சி சார்பில் வழங்கப்படும் உயர்ந்த பதவியாகும். இது தமிழக கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது. கடந்த அதிமுக அரசில் 2017 இல் தளவாய் சுந்தரத்திற்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது. ஆளும் கட்சி சார்பில் விசுவாசமாக உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு இந்த பதவி வழங்கப்படுவது வழக்கம்.

புதிய திட்டம்
இவர்கள் தமிழக அரசின் டெல்லி வேலைகளை பார்த்துக் கொள்வார்கள். தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு முதலீடு, புதிய திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசிடம் இருந்து உடனடி அனுமதி உள்ளிட்டவை இவர்களது பொறுப்பாகும். அதாவது தமிழக அரசு சொல்வதை டெல்லியிடம் கன்வே செய்யும் நபர் என வைத்துக் கொள்ளலாம். இந்த பதவியைத்தான் தனக்கு தருமாறு ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் கோரிக்கை விடுத்து வருகிறாராம். இவர் கேட்டுட்டாரு ஸ்டாலின் கொடுப்பாரா?
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications