பிரவீன் சக்கரவர்த்தி கிளப்பிய புயல்.. “பதிவு பிழை என ஒப்புக்கொண்டார்".. CPI வீரபாண்டியன் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட பதிவு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், "பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு பிழை என ஒப்புக்கொண்டார்" என சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தவெக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாக தேர்வாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் எம்.பி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்." எனத் தெரிவித்திருந்தார்.

Praveen Chakravarty Admitted His X Post Was a Mistake Says CPI s Veerapandian

இது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. கூட்டணிக்கு ஒரு பெயரை சூட்டியதோடு, அதில், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக பதிவிட்டிருந்தார் பிரவீன் சக்கரவர்த்தி. அவரது இந்தப் பதிவு கூட்டணி கட்சிகளுக்குள் புயலைக் கிளப்பியது. இது அதிகப்பிரசங்கித்தனம் என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்திருந்தார். அதேபோல, சிபிஐ மாநில செலாளர் மு.வீரபாண்டியனும் விமர்சித்தார்.

இதுதொடர்பாக சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், "தமிழக வெற்றிக் கழக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தனது வலைதள பதிவில் "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் சார்பில்" தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இது தவறானது. இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, குறிப்பிட்ட இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நாடவில்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிடம் இது குறித்து கலந்து கொள்ளவும் இல்லை, கருத்துக் கேட்கவும் இல்லை. அத்தகைய, "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி" பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதுவும் தெரியாது.

நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவான தவெக ஆட்சி அமைக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கியது. ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது, ஒன்றிய அரசின் சதி திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பளித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.

பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளது போன்ற ஓர் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வீரபாண்டியனை, மாநிலங்களவை வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, தனது எக்ஸ் தள பதிவு தொடர்பாகவும் மு.வீரபாண்டியனிடம் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், "பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு பிழை என அவரும் ஒப்புக்கொண்டார். இது அரசியல் பிழை என நாங்களும் சுட்டிக்காட்டி இருந்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+