ஏற்கனவே 2 புருஷன்.. கள்ளக்காதலனால் கர்ப்பமான ஷாலி! மோகம் தீர்ந்த மேகநாதன்! கிறுகிறுத்த கிருஷ்ணகிரி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஏற்கனவே இருவருடன் திருமணமான நிலையில், திருமணத்திற்கு பிறகு வோறொருடன் முறையற்ற உறவில் இருந்த போது எட்டு மாத கர்ப்பமான கர்ப்பிணியை வனப்பகுதியில் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பரபரப்பான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன..
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கோனேகவுண்டனூர் கிராமத்தின் அருகே அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. அந்த வனப்பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வந்ததாக ஆடு மேய்ப்பவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது, மரத்தில் தூக்கிட்ட நிலையில், சுமார் 25 வயதான இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் பல்லேரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி என்பதும் தெரிய வந்தது. அவர் 8 மாத கர்ப்பிணி என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே அவரை காணவில்லை என கூறினர். இதனையடுத்து அவரது உடலின் அருகே இருந்த செல்போனில் யார் யாரிடம் பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் கடைசியாக பந்திக்குறி கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன், கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய அக்ரஹாரத்தைச் சேர்ந்த 19 வயதான புகழேந்தி ஆகியோருடன் பேசியது தெரிய வந்தது.
இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் மேகநாதனுக்கும் ஷாலினிக்கும் முறையற்ற உறவு இருந்ததும் இது தொடர்பாக நடந்த விசாரணையில் தனது நண்பனின் உதவியுடன் மேகநாதன் ஷாலினியை கொலை செய்ததும் தெரியவந்தது. இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஷாலினிக்கும் மதியழகன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஆனால் கணவரை பிரிந்த ஷாலினி தனது முன்னாள் காதலன் ஆஞ்சி என்பவரை 2வது திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் மேகநாதனுடன் ஷாலினிக்கு முறையற்ற உறவு இருந்தது.
இதை அடுத்து இருவரும் தனியாக சந்தித்து பேசியதில் ஷாலினி கர்ப்பமாகி இருக்கிறார். இதை அடுத்து எனது இரண்டாவது கர்ப்பத்திற்கு நீ தான் காரணம் எனவே என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஷாலினி சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஷாலினியை மேகநாதன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதை அடுத்து ஷாலினி செல்போனில் தொடர்ந்து அவரை தொல்லை செய்திருக்கிறார்.
இதனால், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய மேகநாதன் நண்பன் புகழேந்தி உடன் அவரை சந்திக்க சென்றுள்ளார். கடந்த 19ஆம் தேதி ஷாலினியை வரவைத்து நண்பன் புகழேந்தியுடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை துப்பட்டாவால் கழுத்தில் இறுக்கி மரத்தில் தொங்கவிட்டு தப்பியதாக அதிர வைக்கும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications