Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசிக்கு பிரேமலதா, பிரபாகரன் ரகசிய பயணம்? கேப்டனுக்காக சிறப்பு வழிபாடு நடத்த திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவரின் மகனுடன் காசி சென்றுள்ளதாக தேமுதிக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக துபாய்க்கு சிகிச்சைக்கு சென்றவர், தற்போது சென்னையில் தனது இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக இவர் துபாயில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக ஆண்டுதோறும் அவர் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

வதந்திகள்

வதந்திகள்

விஜயகாந்த் தற்போது நல்ல உடல்நிலையில் இருந்தாலும் சில நாள்பட்ட பாதிப்புகள் காரணமாக ஆக்டிவாக அரசியலில் இயங்க முடியவில்லை. இதை காரணம் காட்டி இணையத்தில் சில பொய்யான வதந்திகளும் பரபரப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக கூட பொய்யான வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

 தேமுதிக

தேமுதிக

ஆனால் தேமுதிக கட்சி வட்டாரங்களில் விசாரித்த வகையில் அவரின் உடல்நிலை மோசமாக இல்லை. எப்போதும் அவருக்கு இருக்கும் சில உடல் பாதிப்புகள் மட்டுமே உள்ளன. அதற்கான தினசரி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரும் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

வீடியோ

வீடியோ

தனது தந்தை குறித்து விஜயபிரபாகர் வெளியிட்ட உருக்கமான வீடியோவில், என் அப்பாவிற்கு உடல் நிலை மோசமாக உள்ளது என்று பொய்யான தகவல் பரவி வருகிறது. இதை வைத்து ஏன் பலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். என் தந்தை ஜம் என்று நன்றாக இருக்கிறார். அவரை வைத்து ஏன் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார், என்று விஜயபிரபாகர் தெரிவித்து இருந்தார்.

 வேண்டாம்

வேண்டாம்

அதேபோல் மருத்துவர்களும் கூட விஜயகாந்த் நல்ல உடல்நிலையில் இருப்பதாக கூறியதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி, விஜயகாந்தை மீண்டும் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்து செல்ல அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள், விஜயகாந்தை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல வேண்டாம், சென்னையிலேயே சிகிச்சை வழங்கலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக தேமுதிக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 காசி

காசி

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக அவரின் குடும்பத்தினர் காசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவரது மகன் விஜயபிரபாகரனுடன் டெல்லிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து இவர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக காசி செல்ல இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    Premalatha Vijayakanth Speech | Chennai Flood | Oneindia Tamil
     வேண்டுதல்

    வேண்டுதல்

    விஜயகாந்த் நலம்பெற வேண்டும் என்பதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவரின் மகனுடனும் இன்னும் சில உறவினர்களுடன் காசி சென்றுள்ளதாக தேமுதிக வட்டாரத்தில் தகவல்கள் வருகின்றன. காசி விஸ்வநாதர் கோவிலில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+