விஜயகாந்திற்கு ஹேர்கட், டையிங், டிரிம்மிங் செய்த பிரேமலதா.. கேப்டனின் குழந்தை சிரிப்பை பாருங்க
சென்னை: ஊரடங்கு உத்தரவு காலத்தில் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா ஹேர்கட் செய்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன.
மருந்து கடைகளை தவிர்த்து காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் சலூன் கடை இல்லாததால் ஏராளமானோர் தாங்களே தங்கள் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் ஹேர் கட்டிங் செய்து விடுகிறார்கள்.

விஜயகாந்த்
அண்மையில் கிரிக்கெட் வீரர் கோஹ்லிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா முடி திருத்தம் செய்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது. அதை விட தற்போது ஹாட் நியூஸ், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்திற்கு அவரது மனைவி ஹேர்கட் செய்துள்ள காட்சிகள் வைரலாகி வருகிறது.

குழந்தை சிரிப்பு
விஜயகாந்திற்கு முதலில் ஹேர்கட் செய்கிறார் பிரேமலதா. அப்போது அவர் கூறுகையில் வழக்கமாக கேப்டனுக்கு ஒருவர் முடி திருத்தம் செய்வார். தற்போது கொரோனா பாதிப்பால் பாதுகாப்பு நடவடிக்கையாக நானே இதை செய்கிறேன் என்றார் (கண்ணை மூடிக் கொள்ளுங்கள்- முடி விழுந்துவிடும் என்று குழந்தையிடம் சொல்வது போல் சொல்கிறார் பிரேமலதா).

டையிங்
இது முடிந்தவுடன் ஷேவிங் செய்து இரு காதுகளின் மேல் உள்ள கிர்தாக்களை டிரிம்மிங் செய்கிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு விஜயகாந்திற்கு ஷேவிங் செய்கிறார். அவரின் தலைமுடிக்கு டை அடித்து விடுகிறார். அப்போது பிரேமலதா கூறுகையில் கேப்டனுக்கு நான் முடி கட் செய்து விடுவது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் இருக்கும் போது அவருக்கு நான்தான் கட் செய்து விடுவேன் என்றார்.

சிரிப்பு
பின்னர் கேப்டனின் கை, கால்களில் உள்ள நகங்களை வெட்டினார் பிரேமலதா. கைகளில் நகங்களை எவ்ளோ ஸ்மூத்தா கட் செய்துள்ளேன் பாருங்கள் என பிரேமலதா சொன்னவுடன் ஒரு குழந்தையை போல் சிரிக்கிறார் விஜயகாந்த். கால்களின் நகங்களையும் கட் செய்துவிட்டு கிரீம் பூசுகிறார். அப்போது கால்களில் உள்ள தழும்புகள் குறித்து பிரேமலதா கூறுகிறார்.
|
ஃபைட் சீன்
இதெல்லாம் என் கணவரின் வீரத் தழும்புகள். ஒவ்வொன்றும் சினிமாவில் ஃபைட் சீனின் போது ஏற்பட்டது. ஒவ்வொரு தழும்பிற்கும் ஒரு வரலாறு உண்டு என்றார். இவையெல்லாம் முடித்தவுடன் விஜயகாந்த் தலை வாரிக் கொண்டு ஒரு சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள்! எத்தனை அழகாக இருக்கிறது! கேப்டன் கேப்டன்தாங்க!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications