வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தேமுதிக குறித்து எடப்பாடி பழனிசாமி விட்ட வார்த்தைக்கு, பிரேமலதா செல்போனில் தொடர்பு கொண்டு அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறுகையில், கூட்டணிக்கு தலைமையில் இருப்பவர்கள் அழைத்தால் தான் செல்ல முடியும். அப்போது கூட்டணியில் நல்உறவு ஏற்பட்டு வெற்றி பெற முடியும். திமுகவில் இருந்து தேமுதிகவுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தன. நாங்கள் அதிகாரப்பூர்வமாக யாரிடமும் பேசவில்லை. நான் ஈஷா சென்று வந்த பிறகு அதிமுக - பாஜக கூட்டணிக்கு செல்ல போவதாக கூறினார்கள்.

ராஜ்யசபா சீட் பஞ்சாயத்து
இனியும் தாமதப்படுத்தாமல் முடிவு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். திமுகவில் இருந்துதான் அழைத்தார்கள். அவர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையாக இருந்தது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி பாஜக, பாமக உள்ளிட்ட அனைவரையும் அழைத்து பேசி கூட்டணி உடன்பாடு செய்கிறார். ஏன் தேமுதிகவை அழைக்கவில்லை.
அதனால் தான் எல்லாரும் உடைந்தோம். உங்கள் கூடவே நம்பி இருந்த தேமுதிகவை விட்டு, உங்களை விட்டு ஓடிய அந்த 2 கட்சியுடன் முதலில் கையெழுத்து போடுகிறார். அப்படியென்றால் தேமுதிகவை பற்றி அவரின் நினைப்பு என்ன என்கிற கேள்வி வந்தது. அரசியலில் நாகரீகம், கண்ணியம் மிகவும் முக்கியம். ராஜ்யசபா சீட் பற்றி எடப்பாடி தவறாக பேசி வருகிறார்.
எடப்பாடிக்கு பிரேமலதா டோஸ்
அதனால் தான் ஆதாரத்தை வெளியிட்டேன். நாங்கள் அவரை 100 சதவீதம் நம்பினோம். ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லிவிட்டு தரவில்லை. தொலைபேசியில் கூட அதை விளக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பில் யார் யாரோ சொல்கிறார்கள் என்று ஒரு மாதிரி பேசுகிறார். நான் அதன்பிறகு அவரிடம் தொலைபேசியில் பேசி மறுப்பு தெரிவித்தேன்.
எடப்பாடியின் வார்த்தை தான் எங்களை பாதித்தது. கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை என்று மழுப்பினார். அரசியலில் மாண்பு முக்கியம். நாங்கள் அவருக்கு காத்திருந்தோம். அவருக்கு அதன் முக்கியத்துவம் புரியவில்லை. நாங்கள் 0.5 சதவீதம் வாக்கு வங்கி உடைய கட்சி என்கிறார்கள். இது 2024 நாடாளுமன்ற தேர்தலில் தெரியவில்லையா. இப்போது தான் எங்களின் அருமை புரிந்துள்ளது. அதனால் எல்லா மேடைகளிலும் எங்களைப் பற்றி பேசுகிறார்"
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications