தேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா விஜயகாந்த்!
Recommended Video

சென்னை: தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேமுகி நிறுவனத் தலைவராக விஜயகாந்த் நீடித்து வருகிறார். விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில்தான் அரசியலில் இறங்கினார். இந்த நிலையில் தற்போது பிரேமலதாவுக்கு பதவி கிடைத்துள்ளது.
சென்னையில் இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

பதவி இல்லாமல் வலம்
தேமுதிக ஆரம்பித்தது முதல் எந்தப் பதவியும் வகிக்காமல் கட்சியில் வளைய வந்தார் பிரேமலதா. இருப்பினும் கட்சியின் முக்கியமான பிரச்சார பீரங்கியாக திகழ்ந்து வந்தார் பிரேமலதா

முக்கிய பிரசார பீரங்கி
ஒவ்வொரு தேர்தலிலும் விஜயகாந்த்துக்கு சமமாக ஊர் ஊராக போய் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தவர் பிரேமலதா. கட்சியில் அவரின்றி எதுவும் இல்லை என்ற அளவுக்கு முக்கியமானவராகவும் திகழ்ந்தார்.

சுதீஷ் இளைஞர் அணி
பிரேமலதாவின் தம்பி சுதீஷ் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இந்த மூவரும்தான் தேமுதிகவின் முகமாக திகழ்ந்தனர். இந்த நிலையில் தற்போது பிரேமலதாவுக்கு முதல் முறையாக பொருளாளர் பதவி கிடைத்துள்ளது.

மகனும் அரசியலில்
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில்தான் தீவிர அரசியலுக்கு வந்தார். கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். விஜயகாந்த்துக்குப் பதில் இவர்தான் தீவிரமாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு இளைஞர் அணி பொறுப்பு அல்லது துணைத் தலைவர் பதவி தரப்பட வேண்டும என்ற கோரிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைக் குழல் துப்பாக்கி போல
தற்போது விஜயகாந்த் சுகவீனமாக உள்ளதால், பிரேமலதா விஜயகாந்த்தும், அவரது மகன் விஜய பிரபாகரனும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல தேமுதிகவின் உயர்வுக்கு பாடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications