கையில சீட்டு.. தேர்தலில் கூட்டு! மகனுக்காக வைராக்கியமாய் பிரேமலதா! எடப்பாடிக்கு ஒரே ஆப்ஷன்.. பரபர
சென்னை: ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கி இருக்கிறது. அதன் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தனது மகன் விஜய பிரபாகரனை எம்பி ஆக்கி டெல்லிக்கு செல்ல வைத்து அழகு பார்க்க நினைக்கிறார் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி உடன் தற்போது பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக குறிப்பிடுகிறது. என்ன முடிவெடுக்க போகிறார் எடப்பாடி? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தமிழகத்திற்கு 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இருக்கும் நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுக அணிக்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைப்பது உறுதியாக இருக்கும் நிலையில் திமுக சார்பாக, வில்சன், சல்மா, உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். கூடுதலாக இருக்கும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மக்கள் நீதி மையத்தின் கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது திமுக.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த தனது மகன் விஜய பிரபாகரனை மாநிலங்களவை தேர்தலில் களம் இறக்க விருப்பப்படுகிறார் பிரேமலதா விஜயகாந்த். கடந்த மக்களவைத் தேர்தலின் போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என தேமுதிக தரப்பு எதிர்பார்த்த நிலையில், அதிமுக அதனை மறுத்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் கூட்டணியை முன்வைத்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடம் அந்த கோரிக்கை வைத்திருக்கிறது தேமுதிக தரப்பு.
கடந்த முறை அன்புமணிக்கும், ஜிகே வாசனக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்ததை சுட்டிக்காட்டி, அவர்கள் பாஜக கூட்டணிக்கு தாவியதையும் கோடிட்டு காட்டி இருக்கிறது தேமுதிக தரப்பு. அதே நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தோள் கொடுத்ததையும் நினைவு கூர்ந்து இருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். கடந்த இருமுறை நடந்த மாநிலங்களவை தேர்தலில் ஜிகே வாசனுக்கும் அன்புமணிக்கும் கொடுத்தது போல இந்த முறை அதிமுக நிர்வாகி ஒருவருக்கும், கூட்டணி கட்சிக்கும் சீட்டு ஒதுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி அதிகரித்து இருக்கிறது.
அதே நேரத்தில் அதிமுகவில் இருக்கும் சீனியர்களோ அதிமுகவுக்கு தான் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவுடன் மாநிலங்களவை சீட்டு பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது குறித்து தேமுதிக நிர்வாகிகளிடம் பேசியபோது சில தகவல்கள் கிடைத்தது. திமுக தரப்பில் எப்படி வாரிசாக களமிறங்கியவர்கள் முதல் தேர்தலில் வெற்றி பெற்று பதவியைப் பெற்றார்களோ? அதே போல தனது மகனும் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என பிரேமலதா விரும்பினார். அதன் காரணமாகத்தான் விருதுநகரிலும் களம் இறக்கப்பட்டார்.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்த நிலையில், விஜய பிரபாகரனை விட தனது மகன் தோற்றதற்கு பிரேமலதா விஜயகாந்த் தான் வருத்தப்பட்டாராம். விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். அதேபோல தனது மகனும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். ஆனால் தோல்வியடைந்ததால் அவரை எப்படியாவது எம்பி ஆக்கி டெல்லிக்கு செல்ல வைக்க வேண்டும் என்பதுதான் பிரேமலதாவின் விருப்பம். அதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சீட்டு இல்லை என கூறியது பிரேமலதா தரப்பை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. அதனால் தான் தற்போது கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது குறித்து கூட அவர் பேசவில்லை. மாநாட்டிற்கு பிறகு தான் கூட்டணி குறித்து பேசுவோம் என திட்டவட்டமாக கூறி வருகிறார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை பதட்டத்தில் வைத்திருக்க தான் என்கிறார்கள். தேமுதிகவை பொருத்தவரை மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை தந்தால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்றும் பிரேமலதா உறுதியாக இருக்கிறார்.
அதற்கு எடப்பாடி தரப்பும் ஒத்துப்போகவில்லை என்றால், திமுக தரப்பில் 23 எம்எல்ஏக்கள் கூடுதலாக இருக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் மற்றும் சிறிய சிறிய கட்சிகளின் எம்எல்ஏக்களை வைத்து திமுகவிடம் மாநிலங்களவை பதவியை பெற்று விடலாம் என்றும் காய் நகர்த்தி வருகிறார் பிரேமலதா என்கின்றனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலி.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜகவின் வெயிட்டிங் கேம் பின்னணி -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications