"அம்மா"வாக மாறி போன "அண்ணி"யார்.. அப்படியே ஷாக் ஆகி தலை சுற்றிப் போன அதிமுகவினர்!

வேனுக்குள் அமர்ந்து ஜெ.போல் பிரேமலதா பிரச்சாரம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பிரச்சாரம்..பயந்தோடும் கூட்டணி கட்சிகள்

    சென்னை: அன்றைக்கு சும்மா ஒரு பேச்சுக்குதான் "அம்மாவிற்குப் பிறகு எங்களுக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை அண்ணியார்" என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரேமலதா பற்றி சொன்னார். ஆனால் பிரேமலதாவோ நிஜமாகவே "அம்மா" போல தன்னை நினைத்து கொண்டுவிட்டார் போலும்!

    சில தினங்களுக்கு முன்பு திருச்சி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிரேமலதா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    அப்போது பேசிய வெல்லமண்டி நடராஜன், "அம்மாவிற்குப் பிறகு எங்களுக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை அண்ணியார்தான்" என்று ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசினார்.

    பல்பு மேல் பல்பு

    பல்பு மேல் பல்பு

    இந்த கூட்டத்தில்தான் எம்ஜிஆர் பாடலை கேப்டன் அடிக்கடி பாடுவார் என்று ஒரு சிவாஜி பாடலை சொல்லி பல்பு வாங்கினார் பிரேமலதா! இதற்கு பிறகு நிறைய பல்புகளை அவர் வாங்க ஆரம்பித்தாலும் திரும்பவும் நேற்று திருச்சிக்குள் வந்து நேற்று அனைவருக்கும் ஷாக் தந்துவிட்டார்!

    கும்பிட்டார்

    கும்பிட்டார்

    காலை 8 மணிக்கே பிரேமலதா வருகைக்காக நிர்வாகிகள் காத்துக் கிடக்க 11 மணிக்குதான் வேனில் வந்து சேர்ந்தார். தொண்டர்கள் ஒரு பக்கம் வெயிலில் வாடி வதங்க, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, சிட்டிங் எம்பிகுமார் ஆகியோர் கீழே நின்றபடி இருக்கின்றனர். வேனுக்கு மேலே வேட்பாளர்கள் கையை கும்பிட்டபடி நிற்க, வேனுக்கு உள்ளேயே உட்கார்ந்து பேசினார் பிரேமலதா! அதுவும் வெறும் 3 நிமிஷம்தான்!

    முதல் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகள் விவரம்

    ஆளுயர மாலை

    ஆளுயர மாலை

    பிரேமலதா வருவார், தொகுதி மக்களிடம் நெருங்கி பேசுவார், என்று நினைத்து அதற்காக ஒரு ஆளுயர மாலையை ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் அதை வாங்கக்கூடி அவர் வேனை விட்டு கீழே இறங்கவில்லை. ஒரு சில நிமிடங்களில் வேன் அங்கிருந்து கிளம்பி பறந்து சென்றுவிட்டது! அப்போது எம்ஜிஆர் பாட்டு, "கடவுள் ஏன் கல்லானான்... மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே" என்ற பாடல் சத்தமாக ஒலித்து கொண்டிருந்தது!

    சுதீஷ் மனைவி

    சுதீஷ் மனைவி

    ஜெயலலிதா போலவே தன்னை நினைத்து கொண்டுள்ளார் பிரேமலதா. இதற்கு இந்த சம்பவம் மட்டும் காரணம் இல்லை. பிரச்சாரத்தில்கூட "நீங்கள் செய்வீர்களா, தேமுதிகவுக்கு ஓட்டு போடுவீங்களா" என்று ஜெ.போலவே கேட்கிறார். அது மட்டும் இல்லை.. எப்படி ஜெ.க்கு சசிகலா கூடவே வருவாரோ, அதுபோல சுதீஷ் மனைவியை தன்னுடன் எங்கு சென்றாலும் அழைத்து செல்கிறார்! இதெல்லாம் செய்துவிட்டால் மட்டும்??? அண்ணி என்றுமே "அம்மா" ஆக முடியுமா என்ன???

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+