பெட்ரோல் விலையை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்.. ஃபாஸ்ட்டா சைக்கிள் மிதித்து சர்பிரைஸ் தந்த பிரேமலதா
சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வது அறியாமல் திகைத்தனர்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்குமாறு ஒன்றிய அரசுக்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு குறைக்கவில்லை.

திமுக ஆட்சி
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பதாக திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் இன்னும் குறைக்கவில்லை என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. இதையடுத்து பெட்ரோல் டீசல் விலையை தற்போது குறைக்க முடியாது என்பதையும் ஏன் குறைக்க முடியாது என்பதையும் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவரித்துள்ளார்.

டீசல்
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையுயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்த தேமுதிக அறிவித்திருந்தது. அதன்படி இன்றைய தினம் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

எதிர்ப்பு
அவர் சிறிது தூரம் சைக்கிள் ஓட்டி தனது எதிர்ப்பை தெரிவித்தார். முக்கிய சாலையில் செம ஃபாஸ்ட்டாக சைக்கிளை ஓட்டி கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியிருந்தார். தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை ரூ 100 ஐ தாண்டியது. அது போல் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

விலையேற்றம்
எரிபொருள் விலையேற்றம் செய்யப்பட்டால் பால், காய்கறி உள்ளிட்டவற்றின் விலையும் உயரும் என்ற அச்சத்தில் இல்லத்தரசிகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்து, ஊதிய குறைப்புக்குள்ளான மக்கள் இந்த விலையேற்றத்தை எப்படி சமாளிப்பார்கள்? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications