டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 10+1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இது குறித்து திமுகவினர் பலரும் வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
தற்போது சோஷியல் மீடிா முழுவதும், பிரேமலதா விஜயகாந்த் தனது இரண்டு மகன்களுடன், லேண்ட் ரோவர் டிபன்டர் காருடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோதான் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், கொள்கை பிடிப்புடன் இருக்கும் கட்சிகளுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. உதாரணத்திற்கு கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட கட்சிகள், திமுகவுடன் இருக்க காரணம் சீட் கிடைக்கும் என்பதால் கிடையாது. பொது எதிரி பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான். ஆனால், தொகுதி பங்கீடு என்று வரும்போது, இந்த கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்காமல், கடந்த முறையை விட தொகுதிகளை குறைத்திருப்பது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.
கடந்த முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 5 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல சிபிஎம் உடன் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது. விசிக 10 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. திமுக வெறும் 5 தொகுதிகளில் பேரம் பேசுவதாதல் தொகுதி பங்கீடு இழுபறியாக இருக்கிறது.
இதற்கு காரணம் புதியதாக உள்ளே வந்த தேமுதிகதான். இந்த கட்சிக்கு எதுக்கு ஒரு ராஜ்யசபா சீட்? அதுபோக 10 எம்எல்ஏ சீட் என கூட்டணி கட்சிகளும், திமுகவினரும் கொந்தளித்துள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸ் 28 சீட்களை அள்ளி சென்றுவிட்டது. மீதம் இருக்கும் தொகுதிகளை பங்கீட்டுக்கொள்ள பஞ்சாயத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே தேமுதிகவுக்கு சொல்லப்பட்ட 10 சீட்டை குறைத்துக்கொள்ளுமாறு திமுக அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கிறது.
இந்த சூழலில்தான் பிரேமலதா விஜயகாந்த், டிபன்டர் காருடன் போஸ் கொடுத்திருந்தது விவாதமாகியிருக்கிறது. எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி, கூட்டணிக்குள் கொண்டுவரனும்? என்று திமுகவினரே கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த கட்சிக்கு செய்வதற்கு பதில், கொள்கை பிடிப்புள்ள கட்சிகளுக்கு செஞ்சா கூட, நம்முடைய செல்வாக்கு அதிகரிக்கும். அதைவிட்டுட்டு தேமுதிகவுக்கு எதுக்கு செய்யனும்? என கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications