விஜயகாந்துக்கு 10 வருஷ ட்ரீட்மெண்ட்! நான் பாதி டாக்டராகி விட்டேன்! பிரேமலதா சொன்ன ருசிகரத் தகவல்!
சென்னை: விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தாம் பாதி டாக்டராகி விட்டதாகவும், டாக்டருக்கு தெரியும் எல்லா விஷயங்களும் தனக்கு முக்கால்வாசி தெரியும் எனவும் கூறியிருக்கிறார்.
தனக்கு பல்ஸ் பார்க்கத் தெரியும், ஆக்ஸிஜன் பார்க்கத் தெரியும், சர்க்கரை அளவு பார்க்கத் தெரியும், ஐசியூவில் ஓடிக்கொண்டிருக்கும் மானிட்டர் பார்க்கத் தெரியும் எனக் கூறியுள்ளா பிரேமலதா விஜயகாந்த், தனது கணவரை 10 ஆண்டுகளாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தாம் முக்கால் டாக்டராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் பிழைக்கமாட்டார் என அவர் உயிர் பிரிவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னர் மருத்துவர்கள் தன்னிடம் கூறிய போது, பல்ஸ், ஆக்சிஜன் என எல்லாமே நல்லாயிருக்கிறதே, பிறகு ஏன் அவர் பிழைக்கமாட்டார் என்கிறீர்கள் என தாம் மருத்துவர்களிடம் கேட்டதாகவும் வெண்டிலேட்டரில் இருப்பதால் எல்லாம் நல்லாயிருப்பது போல் காட்டுகிறது, மற்றபடி அவர் உடலில் எதுவும் இல்லை என டாக்டர்கள் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
எத்தனையோ மருத்துவமனைகள், எத்தனையோ மருத்துவர்கள் என 10 ஆண்டுகளாக விஜயகாந்தை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதை நினைவுப்படுத்தி பேசிய அவர், இனி தன் வாழ்நாளில் கல்யாண நாள் என்பதே கிடையாது என்றும் திருமண நாள் அன்று தாம் அலுவலகத்துக்கு வரமாட்டேன் எனவும் அன்றைய நாள் யாரையும் சந்திக்க மாட்டேன் எனவும் அழுதுகொண்டே தனது துயரத்தை வெளிப்படுத்தினார்.
விஜயகாந்துகாக சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், இன்னும் ஓரிரு வாரங்களில் கிராமம் கிராமமாக தாம் பயணிக்க தொடங்கிவிடுவேன் என்று பேசி திமுகவைவும் சைலண்டாக சாடினார். ராஜாஜி ஹால் கேட்கவில்லை என ஏதோதோ யார் யாரோ பேசுகிறார்கள் என்றும் ராஜாஜி ஹாலில் விஜயகாந்தின் உடலை வைக்க தாங்கள் அனுமதி கேட்டதாகவும் ஆனால் பதிலே வரவில்லை எனவும் பிரேமலதா பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications