Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரேமலதாவின் நுண்ணறிவு தந்திரம்! ஆலயமாக மாறிய விஜயகாந்த் நினைவிடம்! வியந்து புகழ்ந்த ஜெ.,வின் நிழல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமலதா விஜயகாந்த் ஜெயலலிதாவை ஒப்பிட்டு தேமுதிக பொருளாளர் எல்கே சதீஷ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில், ஜெயலலிதா தான் எனது ரோல் மாடல் என பிரேமலதா கூறியிருந்தார். இந்த நிலையில் பிரேமலதாவின் அரசியல் தன்னை வியக்க வைப்பதாக ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவடைந்த பிறகு தமிழகத்தின் ஒரே பெண் அரசியல் தலைவராக ஒருவராக உருவெடுத்திருக்கிறார் தே.மு.தி.க பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா.

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சகோதரரும் தேமுதிக பொருளாளருமான எல்கே சுதீஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பது போன்று, சிங்கப்பெண் என பதிவிட்டிருந்தார். இதை அடுத்து அதிமுக தேமுதிக கூட்டணி உருவாக இருப்பதாக கருத்துக்கள் உலாவியது.

Premalatha Vijayakanth Jayalalithaa Poongundran

பிரேமலதா விஜயகாந்த்

இந்த நிலையில் அரசியலில் சிங்க பெண்ணாக தனது சகோதரி இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு பதிவிட்டதாக எல்.கே. சுதீஷ் கூறியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த பிரேமலதா விஜயகாந்த் ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல ஒரு எம்ஜிஆர் ஒரு ஜெயலலிதா தான். அவர்கள் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி முதல்வராக பல சாதனைகள் செய்தவர். அவர்தான் எனது ரோல் மாடல் எனக்கூறி இருந்தார்.

பூங்குன்றன்

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தன்னை கவர்ந்திருப்பதாக கூறி இருக்கிறார் ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன் இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறி, தன் ரசிகர் வட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் விஜயகாந்த் அவர்கள். அவரது மறைவு, தேமுதிக-க்கு ஒரு அதிர்ச்சி மட்டுமல்ல; பலருக்கு அது கட்சியின் இறுதி அத்தியாயமாகவே தோன்றியது. ஆனால், மக்கள் நம்பிக்கை இழக்கின்ற சூழ்நிலையில் முழு தைரியத்தோடு ஒரு பெண் முன்னே வந்தார். அவர்தான் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்.

கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்தின் அரசியல் பயணத்தின் ஆரம்பத்திலிருந்தே, பிரேமலதா அவர்கள் அவருக்கு பின்னால் இருந்தார். அவரது பங்கு, விளம்பரமோ, ஆவேச உரைகளோ அல்ல..! மாறாக, திட்டமிடல், தொடர்பு, மற்றும் அமைப்பின் ஒற்றுமையை பேணுதல் என்பதே..! பல மேடைகளில், தலைவரின் பக்கம் நின்று உரையாற்றிய சில தருணங்கள் இருந்தாலும், அவர் பெரும்பாலும் நிழல் சக்தி போலவே செயல்பட்டார்.

பிரேமலதா

விஜயகாந்த் மறைந்த பின், கட்சி உறுப்பினர்கள் மனத்தளர்ச்சியுடன் இருந்தனர். "இப்போ யார் கூட்டத்தை காக்கப் போகிறார்கள்?" என்ற கேள்விக்கு பிரேமலதா அவர்கள் பதில் சொல்ல வேண்டிய சூழல்.
அவர், கூட்டத்தைச் சோதிக்கவோ, புள்ளிவிவரங்களை ஆராயவோ செய்யவில்லை. மாறாக, மக்கள் உணர்ச்சியை நேரடியாக தொடும் முடிவுகளை எடுத்தார்.

விஜயகாந்த் நினைவிடம்

விஜயகாந்த் அவர்கள் நினைவிடம், சாதாரணமாக ஒரு நினைவுச் சின்னமாகவே இருந்திருக்கலாம்.
ஆனால், பிரேமலதா அதை ஆலயமாக மாற்றினார். இது ஒரு சாதாரண அரசியல் நடவடிக்கை அல்ல..! இது ஒரு உணர்ச்சி நுண்ணறிவு கொண்ட தந்திரம். இதனால், விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவர் என்ற மட்டத்தில் இல்லாமல், மக்கள் மனதில் ஒரு மனித தெய்வமாக அடையாளப்படுத்தப்படுகிறார்.

தேமுதிக

பலர், "விஜயகாந்த் இல்லையென்றால் கூட்டம் குறையும்" என்று எண்ணினர். ஆனால், பிரேமலதாவின் நடைமுறை காட்டியது வேறு. கூட்டம் குறையவில்லை. அவரின் உரைகள், கூர்மையான தாக்கம் இல்லாமல், நிதானமான உறுதி கொண்டவை. இது, விமர்சனத்துக்கு நேரடி பதில் அளிப்பதற்குப் பதிலாக, மக்களை ஒரே உணர்வில் இணைப்பதற்கான வழி.

பெண் அரசியல் தலைவர்

தமிழக அரசியலில், தலைவரின் மறைவுக்குப் பின் கட்சியை காப்பாற்றிய பெண் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள்..! அந்த வரிசையில், பிரேமலதாவும் தன் இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த பாணி, ஆவேசத்திற்கு பதிலாக அமைதியான உறுதி. விஜயகாந்த் எப்படி புரட்சித் தலைவர் எம்ஜிஆரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டாரோ, அதேபோல எனக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதா தான் ரோல்மாடல்" என பேசி, பெண்களுக்கான அடுத்த தலைவர் நான்தான் என்று பெண்களை தன்பக்கம் ஈர்க்க நினைக்கிறார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்.

அரசியல் வளர்ச்சி

இன்று தேமுதிக, முந்தைய அளவுக்கு ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால், அது முற்றிலும் மறைந்து விடாமல் இருப்பதற்கான காரணங்களில் முக்கியமானது பிரேமலதாவின் முயற்சி. அவரது அரசியல் இன்னும் வளர்ச்சி பாதையில் உள்ளது; ஆனால், "நினைவுகளை இயக்கமாக்கும்" அவரது திறமை, எதிர்காலத்தில் தேமுதிக-க்கான உயிர்மூச்சாக இருக்கும்.

ராஜதந்திரங்கள்

உறவினர்கள் பேச்சை கேட்காமலும், கட்சியினர் பேச்சை கவனத்தில் கொண்டும், "நான் சொல்வதைத்தான், மகனாக இருந்தாலும் இல்லை யாராக இருந்தாலும் கேட்க வேண்டும்" என்ற ஆளுமைதான் அவரை இன்று உயர்த்தி பிடித்திருக்கிறது. இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ற அவருடைய ராஜதந்திரங்கள் என்னையும் கவர்கின்றன. வாழ்க! வளர்க..!" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+