மருத்துவ கழிவுகளால் நாறும் தமிழ்நாடு.. அள்ளி கேரளாவுக்கே திருப்பி அனுப்புங்க.. பிரேமலதா கொதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் இருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டு எல்லையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி, மீண்டும் அவர்கள் நாட்டிற்கே தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொந்தளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கனிம வளங்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. அதன் பின்னர் கேரளாவில் இருந்து திரும்பி வரும் லாரிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவை மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

premalatha vijayakanth kerala tamil nadu

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாக கேரளா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இந்த மருத்துவக் கழிவில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் கழிவுகளாக நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழக அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள், தமிழக - கேரள எல்லையில் வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பைக் கிடங்கா என கொந்தளித்துள்ளனர்.

இந்நிலையில், கேரளாவை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் வளங்களான கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு, கேரளாவிற்கு கடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவக் கழிவு, குப்பைகள், எலக்ட்ரானிக் கழிவுகள் போன்றவற்றைத் தமிழ்நாட்டின் எல்லைகளில் டன் டன்னாக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
எல்லைகளைப் பாதுகாக்காமல் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்து தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்த அரசின் செயல்கள் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தலைகுனிவு.

பக்கத்தில் இருக்கும் கேரளா எல்லா வளத்தோடும், நலத்தோடும் சிறப்பாக உள்ளது. அங்கே இருக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்? அரசாங்கத்தின் அதிகாரிகள், சுங்கச்சாவடியில் பணியாற்றுபவர்களும் என்ன செய்கின்றனர்? இந்த அளவிற்குக் கேவலமான நிகழ்வுகள் தமிழகம் சுற்றி இருக்கின்ற எல்லா எல்லை பகுதிகளிலும் நடந்து கொண்டு இருக்கின்றன.

இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது. இது மிகமிக ஒரு கண்டிக்கத் தக்க விஷயம். தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டறிந்து அவர்களின் நாட்டிற்கே அந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்தில் கொண்டு அதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைக் குப்பை நாடாக மாற்றிய கேரள அரசைக் கடுமையாக கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+